வங்கக் கடலில் டிசம்பர் 3இல் புயல் உருவாகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 1, 2023

வங்கக் கடலில் டிசம்பர் 3இல் புயல் உருவாகிறது

சென்னை, டிச.1  வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி டிச.3-ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கண் காணிப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளார். 

அந்தமான் அருகே உருவாகி, வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வுப் பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று (1.12.2023) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 3-ஆம் தேதி வாக்கில் புயலாகவும் வலுப்பெறும். 4-ஆம் தேதி அதிகாலை வடதமிழ்நாடு - தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. 

இதன் தாக்கத்தால் தமிழ்நாட்டில் வரும் 4ஆ-ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும். கடலோர மாவட் டங்களில் கனமழையும், டெல்டா மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது. 

இதற்கிடையே, வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் இலங்கை அருகே நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 29-ஆம் தேதி காலை முதல் இரவு வரைசென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்நிலையில், சென்னை மாநக ராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புயல் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (30.11.2023) ஆய்வு செய்தார். 

 கண்காணிப்பு பணிகளுக்கென மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட் டுள்ள அய்ஏஎஸ் அதிகாரிகள் சம்பந் தப்பட்ட மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்பு, நிவாரண நடவடிக் கைகளை மேற்பார்வையிடுமாறும் அறிவுறுத்தினார். 121 பல்நோக்கு பாதுகாப்பு மய்யங்கள், 4,967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருப் பதை யும் உறுதி செய்ய அறிவுறுத்தினார். 

No comments:

Post a Comment