வேளாண் பொருள்கள் ஏற்றுமதி : 18 லட்சம் டன்னாக சரிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 27, 2023

வேளாண் பொருள்கள் ஏற்றுமதி : 18 லட்சம் டன்னாக சரிவு

புதுடில்லி, டிச 27 வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த செப்டம்பர் மாதம் நாட்டின் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி 17.93 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. இது, முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் 27.94 லட்சம் டன்னாக இருந்தது.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வேளாண் பொருள் களின் ஏற்றுமதி தலா 33 லட்சம் டன்னாக இருந்தது. இருந்தாலும், உடைந்த அரிசி மற்றும் பாசுமதி அல்லாத அரிசி உள்ளிட்ட பல்வேறு வகை அரிசிகளை ஏற்றுமதி செய் வதற்கு ஒன்றிய அரசு பல கட்டுப் பாடுகளை விதித்ததால் ஒட்டு மொத்த வேளாண் பொருள்களின் ஏற்றுமதி தற்போது 18 லட்சம் டன்னுக்கும் குறைவாக சரிந் துள்ளது.
ரூபாய் மதிப்பின் அடிப்படையில், கடந்த 2022 ஆகஸ்டில் ரூ.18,128 கோடியாக இருந்த பண்ணை பொருள்களின் ஏற்றுமதி நடப் பாண்டின் அதே மாதத்தில் ரூ.14,153 கோடியாக குறைந்துள்ளது. அந்த மாதத்தில் பாசுமதி அல்லாத மற்ற அரிசி வகைகளின் ஏற்றுமதி 4.25 லட்சம் டன்னாகவும், பாசுமதி அரிசி ஏற்றுமதி 1.21 லட்சம் டன்னாகவும் இருந்தது. வெங்காயம் 1.51 லட்சம் டன்னும், மாட்டிறைச்சி 1.21 லட்சம் டன்னும் ஏற்றுமதியாகின. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் வேளாண் பொருள் களின் மொத்த ஏற்றுமதி 172.27 லட்சம் டன்னாக உள்ளது.
அரசி ஏற்றுமதிக் கட்டுப்பாடு, உள்நாட்டு விநியோகத்தை அதிக ரிக்கவும், உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத் தவும் பாசுமதி அரிசிக்கு குறைந்த பட்ச ஏற்றுமதி விலை நிர்ணயம் செய்தது ஆகிய கார ணங்களால் கடந்த செப்டம்பரில் ஒட்டு மொத்த வேளாண் பொருள் களின் ஏற்றுமதி பாதிக்கப்பட் டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment