ஆழமான சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை 140 மணி நேரத்தில் மீட்ட சீனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 9, 2023

ஆழமான சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை 140 மணி நேரத்தில் மீட்ட சீனா

featured image

சீனாவின் தென்கிழக்கு மாகானமான ஷகீன் பிராந்தியத்தில் 16.08.2014 அன்று அங்குள்ள சுரங்கம் ஒன்றில் 33 ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர்.
முதலில் சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட விவகாரத்தில் விரைந்து மீட்டு விடலாம் என்று இருந்தது, ஆனால் அது கடினமான பணி என்று சில மணி நேரங்களில் அறிவிக்கப்பட்டது, இந்த செய்தி கிடைத்த உடன் உடனடியாக. சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்பதில் கைதேர்ந்தவர்களைக் கொண்ட நாடாக சீனா இருந்த போதும், இது போன்ற சுரங்க விபத்தில் சிக்கியவர்களை ஏற்கெனவே மீட்ட சிலி மற்றும் ஜெர்மன் நாட்டு தொழில் நுட்ப வல்லுநர்களோடு பேசினர். உடனடியாக இரண்டு முக்கிய அரசுத்துறை அதிகாரிகள் குழு ஒன்றை அந்த நாட்டு அரசு அனுப்பியது. சுரங்கத்தில் சிக்கிக்கொண்டுவர்களை மீட்கும் வகையில் முக்கிய பணிகள் அனைத்தையும் அம்மாகாண அரசு ரத்து செய்தது. சீன அதிபரும் நேரடியாக சுரங்கத்தில் இருப்பவர்களை மீட்கும் குழுவோடு தொடர்பில் இருந்தார்.
ஹுந்தாய் நிறுவனத்தின் பெரிய துளையிடும் கருவி ஒன்றை வரவழைத்து அதன் மூலம் உணவு உள்பட இதர அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டது.

ஜெர்மனியும் அகலமாக விட்டம் கொண்ட துளைபோடும் கருவியை கொண்டுவந்துசேர்க்க நிபுணர்களின் உதவியோடு தொழிலாளர்களை மீட்கும் பணி துவங்கப்பட்டது.
முதலில் காப்சூல் வடிவத்தில் கூண்டு ஒன்றை உள்ளே அனுப்பி அவர்களை மீட்கும் திட்டம் தீட்டப்பட்டது.
ஆனால் அதற்கு காலநேரம் விரயமாகும் என்ற நிலையில் குழாய்கள் மூலமே வலைப்பின்னல் அமைப்பில் கம்பிகளை உள்ளே அனுப்பி மண் கல் சரிவை கட்டுப்படுத்தி அதிர்வுகளை ஏற்படுத்தாத வகையில் நேரடியாக துளையிட்டு 140 மணி நேரத்தில் 6 நாட்களுக்குப் பிறகு அவர்களை பத்திரமாக மீட்டனர். மீட்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டிருந்தால் முழு சுரங்கவழிப்பாதையுமே அப்படியே சரிந்து மிகப் பெரிய விபத்து நிகழ்ந்திருக்கும் உடனடியாக செயல்பட்டு 33 ஊழியர்களை 6 நாட்களுக்குப் பிறகு மீட்ட மீட்புக்குழுவினருக்கு சீன அரசு சீனாவில் தேசிய நாள் கொண்டாட்டத்தின் போது விருதுவழங்கி கவுரவித்தது.

No comments:

Post a Comment