பள்ளிகளில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 13இல் தொடங்கும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 12, 2023

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 13இல் தொடங்கும்

 

சென்னை,டிச.12- மழை பாதிப்பை கருத்தில் கொண்டு, 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு இன்றுதொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டன. தேர்வு வரும் 13ஆம் தேதி தொடங்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு மாநில அளவில் ஒரே வினாத்தாள் முறையில் அரையாண்டு மற்றும் பருவ தேர் வுகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, அரையாண்டு மற் றும் 2ஆம் பருவ தேர்வுக்கால அட்டவணையை பள்ளிக்கல்வி துறை கடந்த மாதம் வெளியிட் டது. அதில் 11, 12ஆம் வகுப்புக்கு டிசம்பர் 7ஆம் தேதியும், மற்ற வகுப்புகளுக்கு டிசம்பர் 11ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே, மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள் ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பல் வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் 4 மாவட்டங்களுக்கும் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி முதல் தொடர் விடுமுறை வழங்கப் பட்டது.
இதையடுத்து, டிசம்பர் 7ஆம் தேதி தொடங்க இருந்த அரை யாண்டு தேர்வுகள் தள்ளிவைக்கப் பட்டு, தேர்வு கால அட்டவ ணையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து வகுப்புகளுக் கும் அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 11 அன்று தொடங்கி நடக்க இருந்தன. இதற்கான ஏற் பாடுகளும் தீவிரமாக நடந்து வந்தன. இந்நிலையில், நீண்ட விடு முறைக்கு பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதால், மாணவர்கள் நலன் கருதி அரையாண்டு தேர்வு தேதியை 2ஆவது முறையாக மீண் டும் மாற்றம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள் ளார்.
இதுகுறித்து அவர் 10.12.2023 அன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘பாடப் புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்குப் படித்து தயாராக முடியாது. இதை கருத் தில் கொண்டு, அனைத்து மாவட் டங்களிலும் டிசம்பர் 11இல் தொடங்க உள்ள தேர்வுகளை டிசம்பர் 13ஆம் தேதி முதல் மேற் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங் கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.
அதை ஏற்று, 1 முதல் 12ஆம் வகுப்புக்கான புதிய தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வி துறை நேற்று வெளியிட்டது. அதன் விவரம்:
மாநில பாடத் திட்டத்தில் 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு டிசம் பர் 13 முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படுகின் றன. இடையே டிசம்பர் 16, 17 (சனி, ஞாயிறு) தேதிகள் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் தேர்வு கள் நடைபெறும். 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு காலை 10.30 – 12.30 மணி, 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு காலை 10 – 12 மணி, பிளஸ் 1 வகுப்புக்கு காலை 9.30 – 12.45 மணி, பிளஸ் 2 வகுப்புக்கு மதியம் 1.15 – 4.30 மணி என தேர்வுகள் நடை பெறும்.
டிசம்பர் 23 முதல் ஜனவரி 1ஆம்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்படும். பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்படக்கூடும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment