சூத்திரர்களும் - பார்ப்பனர்களும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 25, 2023

சூத்திரர்களும் - பார்ப்பனர்களும்

திருப்பதி தேவஸ்தானத்தின் தீண்டாமை போக்கு அப்பட்டமாகத் தெரிவித்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வேலைவாய்ப்பு விளம்பரம் வெளிவந்துள்ளது.

அதில், சரக்குகளை ஏற்றி இறக்கும் பணி தொழிலாளர்கள், தலைமுடிகளை வகைப்படுத்தும் பணி, கழிப்பறை தூய்மைப் பணி,  இந்தப் பணிகளுக்கு ஆண், பெண் பணியாளர்களை வேலைக்கு எடுக்கிறார்கள்.

இந்த வேலைக்குச் சேர கட்டாயம் இந்துவாக இருக்கவேண்டும்.

 அதிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களாக இருக்கவேண்டும்.

அதே நேரத்தில் திருப்பதி கோவிலில் பிரசாதம் தயாரிப்புப் பணிக்கு பரம்பரை வைணவ பார்ப்பனர்கள் மட்டும் என்று விளம்பரம் செய்துள்ளனர்.

திருப்பதி கோவிலில் பெருமாள் வந்ததே கிருஷ்ண தேவராயர் காலத்தில் தான். அதற்கு முன்பு பழங்குடியினர் வழிபடும் கோவிலாக இருந்தது. 

அதற்கும் முன்பாக அதாவது தெற்கே பவுத்த, சமணம் செழித்து இருந்த காலத்தில் பவுத்த தலமாக இருந்தது. 

 இதற்கு சான்றுகளும் உண்டு. யுவான் சுவாங் என்ற பவுத்த துறவி சீனாவில் இருந்து இன்றைய லெபனான் வரை பயணம் செய்துள்ளார். கி.பி. 630ஆம் ஆண்டு இவர் காஞ்சிபுரத்தில் தங்கி பவுத்தம் குறித்த கல்வியைக் கற்றார்.

அப்போது அவர் திருப்பதியில் உள்ள பவுத்த கோவில் குறித்தும் எழுதியுள்ளார். 7 மலைகளுக்கு அப்பால் செல்வச் செழிப்பிற்காக குமரபுத்தரை தரிசிக்க மக்கள் சென்றது குறித்து எழுதியுள்ளார். 

6ஆம் நூற்றாண்டில் இருந்து 10ஆம் நூற்றாண்டு வரை தெற்கே சமணம், பவுத்தம் கொடுமையாக அழிக்கப்பட்டது, அதன் பிறகு திருப்பதியில் உள்ள பவுத்த கோவில்களுக்கு யாருமே செல்லாமல் இருந்த போது பழங்குடியினர் மட்டுமே அக்கோவிலை பராமரித்து பூஜித்து வந்தனர். 

பின்னர் கிருஷ்ணதேவராயருக்கு முந்தைய மன்னர்கள் சில மூடநம்பிக்கை காரணமாக திருப்பதி கோவிலுக்குச்சென்று செல்வத்தைக் கொட்டத் துவங்கினர். அதன் பிறகுதான் திருப்பதி பாலாஜி கோவிலாக மாறியது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். 

அங்கு பிற தொழில்கள் அனைத்தும் ஆண்டாண்டு காலமாகவே செய்துவருகின்றனர். ஆனால் 'பிரசாதம்' செய்யும் பணிகளை மட்டும் அவாளே எடுத்துக் கொள்கின்றனர்.

No comments:

Post a Comment