புவியின் துருவங்களில் பனிப்பாறைகள் வேகமாக உருகுகின்றன! அய்ரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மய்யம் எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 14, 2023

புவியின் துருவங்களில் பனிப்பாறைகள் வேகமாக உருகுகின்றன! அய்ரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மய்யம் எச்சரிக்கை!

பெர்லின், நவ.14- புவியின் துருவப் பகுதிகளில் பனிப் பாறைகள் உருகி வரும் நிகழ்வு மிகவும் ஆபத்தான கட்டத்தை தொட்டு விட்டதாக அய்ரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மய்யம் எச்சரித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 'ஒரு பூமி துருவம்' என்ற தலைப் பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் துருவப் பகுதியில் அமைந்துள்ள நாடுகள் மற்றும் பனிப்பாறைகள் உள்ள 40 நாடு களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

பின்னர் பேட்டியளித்த அய்ரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தின் இயக்குநர் ஜோசப் ஆஸ்ட்டா பாஸ்டர், பூமியின் வட மற்றும் தென் துரு வங்களில் பனிக்கட்டி உருகுவது மிகவும் மோசமான நிலையை எட்டிவிட்டதாக எச்சரித்துள்ளார். குறிப்பாக ஆர்டிக் மண்டலத்தில் பனிக் கட்டிகள் மிகவும் வேகமாக உருகி வருவதாகவும் அவர் கூறி யுள்ளார்.

பனி உருகுதல் தொடர்பாக தங்கள் மய்யத்தின் செயற்கை கோள்கள் எடுத்த புதிய படங் களை யும் அவர் வெளியிட் டுள்ளார்.

உலக நாடுகளுக்கு காலநிலை மாற்றம் தற்போது பெரிய சவா லாக மாறியுள்ளதாக அய்ரோப் பிய விண்வெளி மய்யத்தின் தலை வர் ஜோசப் தெரிவித் துள்ளார்.

இந்த நூற்றாண்டின் மத்தியி லாவது கார்பன் உமிழ்வை குறைத்தாக வேண்டும் என்பது இவரது கருத்தாகும்.

பனிப்பாறைகள் உருகுவது வேகம் பிடித்திருப்பதால் கடல் நீர்மட்டம் இன்னும் வேகமாக உயர்வதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். காலநிலை மற்றம் என்ற சவாலை எதிர் கொள்ள தனிப்பட்ட ஒவ்வொரு வரின் பங்களிப்பும் தேவை என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன் அரசியல் தலை வர்கள் உடனடியாக முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment