ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கர்னல் தகுதி வழங்க மறுப்பதா? உச்சநீதிமன்றம் கண்டனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 5, 2023

ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கர்னல் தகுதி வழங்க மறுப்பதா? உச்சநீதிமன்றம் கண்டனம்!

புதுடில்லி, நவ.5  ராணுவத்தில் பெண் அதிகாரி களுக்கு கர்னல் தகுதி வழங்க மறுப்பதுகுறித்து உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பெண் அதிகாரிகளின் பதவி உயர் வுக்கான சிறப்பு தேர்வு வாரியத்தை அடுத்த 15 நாள்களுக்குள் கூட்ட வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது. 

இந்திய ராணுவத்தில் ஓய்வுப் பெறும் (60 வயது) வரை பணியாற்ற நிரந்தர பணி தகுதி (பி.சி.) பெற்ற பெண் அதிகாரிகள், ராணுவத்தின் தேர்வு நடைமுறைகளில் கர்னல் பதவிக்கு உயர்த்தப்படாமல் புறக்கணிக்கப்படுவது குறித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. 

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.  

விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த நீதிபதிகள், “ராணுவத்தின் கொள்கை சுற்ற றிக்கை, உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக் களுக்கு முரணாக இருக்கிறது. பெண் அதி காரிகளுக்கு கர்னலாக பதவி உயர்வு அளிக்க கட்-ஆப் கணக்கீடு செயல்முறை தன்னிச் சையாக முடி வெடுக்கப்பட்டுள்ளது. 

பணியில் முறையான பதவி உயர்வு பெற போராடும் பெண் அதி காரிகளுக்கு நீதியை வழங்கவேண் டிய அவசியத்தை ராணுவத்தின் இந்த அணுகுமுறை மீறியுள்ளது. பெண் அதிகாரிகளுக்கு இடமளிக்க போதிய எண்ணிக்கையிலான காலி யிடங்கள் இல்லை எனும் ராணு வத்தின் வாதத்தை முற்றிலுமாக நிராகரிக் கிறோம்.  

எனவே, தீர்ப்பு வெளியான 15 நாள்களுக் குள் பெண் அதிகாரிகளுக்கு ‘கர்னல்’ பதவி உயர்வு வழங்குவதற்கு சிறப்பு தேர்வு வாரி யத்தைக் கூட்ட வேண்டும். ராணுவ அதிகாரி யின் ரகசிய அறிக்கை (சிஆர்) என்பது குறிப்பிட்ட அந்த அதிகாரியின் செயல் திறனை மதிப்பிட்டு, அவர்கள் மேம்படுத்த வேண்டியவை பற்றிய கருத்துகளைக் கொண்டது ஆகும். 9 ஆண்டு கள் சேவைக்குப் பிறகு பதவி உயர்வு நடைமுறைக்காக ராணுவ அதிகாரிகளின் அனைத்து ரகசிய அறிக்கை களையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என் பதை ராணுவக் கொள்கைகள் தெளிவாக்கு கின்றன.  

அதன்படி, கடைசி 2 ரகசிய அறிக்கை களைத் தவிர்த்து மற்ற அனைத்து அறிக்கை களும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண் டும். சர்ச்சைகளைத் தவிர்க்க, அட்டர்னி ஜென ரல் வலியுறுத்தியபடி, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து கட்-ஆப் கணக்கிட வேண்டும்” என பரிந்துரைத்தனர்.

No comments:

Post a Comment