உலகம் முழுவதும் போரில் கொல்லப்பட்ட குழந்தைகளைவிட இஸ்ரேலால் கொல்லப்பட்ட பாலஸ்தீன குழந்தைகள் அதிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 1, 2023

உலகம் முழுவதும் போரில் கொல்லப்பட்ட குழந்தைகளைவிட இஸ்ரேலால் கொல்லப்பட்ட பாலஸ்தீன குழந்தைகள் அதிகம்

காசா, நவ.1- 2019ஆம் ஆண்டு முதல் உலகெங்கிலும் நடத்தப் பட்ட போரில் கொல்லப்பட்ட குழந்தை களின் எண்ணிக்கையை  விட அதி களவிலான பாலஸ்தீன குழந்தைகள் கடந்த மூன்று வாரங் களில் இஸ்ரேல் ராணுவத்தால்  கொல்லப்பட்டுள்ளனர் என  ‘சேவ் தி சில்ரன்’ என்ற அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது. 

29.10.2023 அன்று அந்த அமைப்பு வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம், அக்டோபர் 7 தாக்குதல்  துவங்கியது முதல் பாலஸ் தீனத்தின் காசாவில் 3,300க்கும் மேற் பட்ட குழந்தைகள் கொல்லப்பட் டுள்ளனர் என்றும் மேற்குக் கரை யில் 36 குழந்தைகள் கொல்லப்பட் டுள்ளனர் என்றும் தெரியவந் துள்ளது.

2022 ஆம் ஆண்டு 24 நாடுகளில் 2,985  குழந்தைகளும், 2021ஆம் ஆண்டு  2,515  குழந்தைகளும், 

2020ஆம் ஆண்டு  22 நாடு களில் 2,674 குழந்தைகளும் கொல்லப்பட் டுள்ளனர் என குழந்தைகளும் ஆயுத மோதல்களும் தொடர்பான அய்.நா. அறிக்கை தெரிவித்துள் ளது. தற்போது இஸ்ரேல் படு கொலை செய்துள்ள குழந்தை களின் எண்ணிக்கை, அய்.நா. கூறிய முந்தைய கால  எண்ணிக் கையை விட அதிகமாகும். 

இது தவிர காசாவில் 1,000 க்கும் மேலான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்  என்றும், அவர்க ளில் பெரும்பாலும் கட்டட  இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி மரணித் திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா வில் கொல்லப்பட்ட 8,000க்கும் மேற்பட்டவர்களில் 40 சதவீதத் திற்கும் அதிக மானோர் குழந்தை கள். மேலும் காசாவில் போர் தொடங்கியதில் இருந்து 6,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாய மடைந்துள்ளனர் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

 ‘சேவ் தி சில்ட்ரன்ஸ் இயக்குனர்’ ஜேசன்  லீ கூறுகையில், “குழந்தை களின்  பாதுகாப்பை உறுதி செய்வ தற்கான ஒரே வழி போர் நிறுத் தம்தான்.

போர் குறித்த விவாதத்திற்கு  செலவிடப்படும் ஒவ்வொரு நாளும்  மேலும் அதிக குழந்தை களைக் கொலை செய்கிறது மற் றும் காயப்படுத்துகிறது. 

குழந்தைகள் பள்ளிகளிலும் மருத்துவமனைகளிலும் பாதுகாப் பைத் தேடும் போதும் எல்லா சூழ லிலும்  பாதுகாக்கப்பட வேண்டும்" என்றார். 

காசாவிற்குள் செல்ல வேண்டிய எரிபொருட்களை, மின்சாரத்தை இஸ்ரேல் ராணுவம் துண்டித்தது. 

இதனால் மருத்து வமனைகள்  முடக்கப்பட்டன. இதனால்  சுகா தார அமைப்பு முழுமையாக குலைந்து விட்டது என காசா சுகா தார  அமைச்சகம் அறிவித்தது. 

இந்தச் சூழ்நிலை காசாவில் பிறந்த குழந்தைகள்,கருவில் உள்ள குழந் தைகள் உட்பட அனைத்துக் குழந்தைகளின் உயிரையும் ஆபத் துக்குள் ளாக்கியுள்ளது. கொடூர மான வான்வழித்  தாக்குதலை தொடர்ந்து காசாவிற்குள்  தரைவழி தாக்கு தலை இஸ்ரேல் நடத்தி வரும் நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

No comments:

Post a Comment