அரசமைப்புச் சட்டம் மீது அமைப்பு ரீதியிலான தாக்குதல் நடத்தும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். : காங்கிரஸ் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

அரசமைப்புச் சட்டம் மீது அமைப்பு ரீதியிலான தாக்குதல் நடத்தும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். : காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, நவ.27 ‘பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, தனது ஒவ்வொரு செயல்பாட்டின் மூலம் அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை நசுக்கு கிறது. அரசு இயந்திரத்தின் அனைத்து உறுப்புகளையும் தவறாகப் பயன் படுத்தி அரசமைப்புச் சட்டம் மீது அமைப்பு ரீதியில் கடுமையான தாக்குதலை நடத்துகிறது’ என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று (26.11.2023) குற்றஞ்சாட்டினார்.

 இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நமது ஜனநாயகம் தழைத்திருக்க அரசமைப்புச் சட் டம் அடிப்படையானது அனைத்து இந்தியர்களுக்கும் சமூக, பொருளா தார, அரசியல் உரிமைகளை உறுதி செய்து இந்தச் சட்டத்தை வகுத்த வர்களுக்கு நாம் தலை வணங்கு வோம். இதில் அளிக்கப்பட்டுள்ள அனைத்து அடிப்படை உரிமை களை நசுக்கும் முயற்சியில் தற் போதைய ஒன்றிய அரசு ஈடு பட்டுள்ளது.

அரசு இயந்திரத்தின் அனைத்து உறுப்புகளையும் தவறாகப் பயன் படுத்தி அரசமைப்புச் சட்டத்தின் மீது அமைப்பு ரீதியாகக் கடுமை யான தாக்குதலை பாஜகவும் ஆர் எஸ்எஸ் அமைப்பும் மேற்கொண்டு வருகின்றன. வெறுப்புணர்வுக்கும் பிளவுபடுத்தும் அரசியலுக்கும் எதிராக நிற்க வேண்டிய நேரமிது இதில் காங்கிரஸ் முன்னிலை வகிக் கிறது.

அரசமைப்புச் சட்டத்தின் மீதும் அதன் விழுமியங்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல் குறித்து ஒவ்வொரு குடிமக்களும் கேள்வி யெழுப்ப வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘இந்திய அரசமைப் புச் சட்டம், 74 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது பிரதம ரும் அவருடைய ஆதரவாளர்களும் அரசமைப்புச் சட்டத்துக்கு விசு வாசமாக உள்ளோம் என தங் களைப் போலியாக அறிவித்துக் கொள்கின்றனர்’ எனத் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment