ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உயர் கல்விக் கட்டணத் தொகை அதிகரிப்பு பள்ளி கல்வித்துறை ஆணை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 24, 2023

ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உயர் கல்விக் கட்டணத் தொகை அதிகரிப்பு பள்ளி கல்வித்துறை ஆணை வெளியீடு

சென்னை, நவ.24  உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கான கல்விக் கட்டணத் தொகையை ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தி பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும், ஓய்வுபெற்ற, பணியின்போது உயிரிழந்த ஆசிரியர்களின் குழந்தை கள், தொழில்நுட்பக் கல்வி, டிப்ளமோ, பட்டப் படிப்பு போன்ற உயர் கல்வி படிப்பதற்கான கல்விக் கட்டணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2021-_2-022 கல்வியாண்டு வரை பட்டப் படிப்புக்கு ரூ.5 ஆயிரம், டிப்ளமோ படிப் புக்கு ரூ.2,500 என வழங் கப்பட்டது. இந்த தொகை 2022-23 கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புக்கு ரூ.10 ஆயிரம், டிப்ளமோ படிப்புக்கு ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது. 

இந்நிலையில், முதல மைச்சர் அறிவிப்பின்படி மாநில தேர்வுக்குழு தேர்வு செய்யும் தகுதியுள்ள ஆசி ரியர்களின் பிள்ளைக ளுக்கு தொழிற்கல்வி பட்டப்படிப்பு படிக்க கல்வி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் உயர் கல்வி கட்டணத் தொகை அல்லது ரூ.50 ஆயிரம், தொழிற்கல்வி டிப்ளமோ படிக்க கல்லூரிகளால் நிர்ணயிக்கும் கல்வி கட் டணத் தொகை அல்லது ரூ.15 ஆயிரம் இதில் எது குறைவோ அந்த தொகை அளிக்கப்படும். 

இந்த உயர்கல்வி கட்ட ணத் தொகை, தேசிய ஆசி ரியர் நலநிதியில் வைப் பீடு செய்யப்பட்டுள்ள தொகை யில் பெறப்படும் வட்டித் தொகையில் இருந்து மட்டுமே வழங்கப்பட வேண் டும். இவ் வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment