கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உலக அறிவியல் நாள் விழா கொண்டாட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 12, 2023

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உலக அறிவியல் நாள் விழா கொண்டாட்டம்!

கந்தர்வகோட்டை நவ.12 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாளவிடுதி  அரசு  உயர்நிலைப் பள்ளியும், கந்தர்வகோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நேற்று (10.11.2023)  உலக அறிவியல் தின விழா கொண்டாடப் பட்டது.

இந்நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட செய லாளரும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) முத்துக் குமார் தலைமை வகித்து பேசியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10 ஆம் தேதி உலக அறிவியல் நாள்  கொண்டாடப்படுகிறது.

2001 ஆம் ஆண்டு முதல் அய்.நா. வின் கல்வி, அறிவியல், மற்றும் கலாச் சார அமைப்பினால் இந்த நாள் கொண்டுவரப்பட்டது.

உலகம் முழுவதும் அறிவியலின் பயன்கள், முக்கியத்துவங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

நமது சமூகத்தில் அறிவியலின் முக்கிய பங்கை இந்நாள் சுட்டிக்காட்டுகிறது. 

அறிவியலை சமூகத்துடன் மிகவும் நெருக்கமாக இணைப்பதன் மூலம், அமைதி மற்றும் வளர்ச்சிக்கான சூழலை உலகளவில் அறிவியல் நாள், கொண்டாடுவதன் மூலம் உயர்த்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்றைய அறிவியலின் நவீன வளர்ச் சிகள், மேம்பாடுகள், பயன்கள்  குறித்து அனைத்து குடிமக்களுக்கும் தெரிவிக் கப்படுவதை  உறுதி செய்வதை இந்நாள் மய்ய நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதிலிருந்து நிலையான வளர்ச்சிக்கான அடிப்படை அறிவியல்

மருத்துவம், தொழில், விவசாயம், நீர்வளம், ஆற்றல் திட்டமிடல், சுற்றுச் சூழல், தகவல் தொடர்பு மற்றும் கலாச் சாரம் ஆகியவற்றில் நாம் அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு அடிப்படை அறி வியலின் பயன்பாடுகள் இன்றியமை யாதவை ஆகும்.

மேலும் உலகளவில் சிறந்த ஆய்வு களில் ஈடுபடும் இளம் விஞ்ஞானி களுக்கு யுனெஸ்கோ சிறந்த விருதுகள் வழங்கி இந்நாளில் கவுரவிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் உலக அறி வியல் தினத்திற்கான ஒரு கருப்பொருள் வெளியிடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான கருப்பொருள் அறிவிய லில் நம்பிக்கையை வளர்ப்பது  என்ப தாகும்.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் அ.ரகமதுல்லா வாழ்த்திப் பேசினார். முன்னதாக ஆசிரியை சத்தியபாமா வரவேற்றார்.

இந்நிகழ்வில் ஆசிரியர் பாரதிராஜா, இல்லம் கல்வி தன்னார்வலர் ரசியா, பயிற்சி ஆசிரியைகள் ஆஷா, காயத்ரி, வினோதினி, பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக  அம் பிகை ராஜேஸ்வரி அனைவருக்கும் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment