சில தொழிலதிபர்களுக்காகவா நாட்டின் வளம்? : பிரியங்கா கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 9, 2023

சில தொழிலதிபர்களுக்காகவா நாட்டின் வளம்? : பிரியங்கா கேள்வி

சத்தீஸ்கர், நவ.9 சில தொழிலதிபர்களுக்காக மட்டும்தான் நாட்டின் வளமா? அவர்களுக்கு மட்டும் வாரி வழங்கப்படுகிறது என காங்கிரஸ் பொதுச் செய லாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் குருத் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், நாட்டின் வளத்தை ஒருசிலருக்கு மட்டுமே பாஜக வாரிவழங்குகிறது. இன்று நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் அதா னிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதானி என் பவர் யார்? அதானி உங்களுக்கு (பொது மக்களுக்கு) என்ன செய்தார்? அதானி எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கினார் எனக் கூறமுடியுமா?

டாடா வாகனங்களை உற்பத்தி செய்கிறது. பிர்லாவும் என்ன செய்கிறது என்பது அனை வருக்கும் தெரியும். ஆனால், அதானியும் அம்பானி யும் எதை உருவாக்கினார்கள்? அவர்களுக்காக பணிபுரியும் தொழிலாளர்கள் எண்ணிக்கை எவ்வளவு? எத்தனை வேலைவாய்ப்புகளை அவர்கள் உருவாக் கினார்கள்? மீண்டும் சொல்கிறேன். அவர்கள் பொது மக்களுக்காக எதையும் செய்ய வில்லை. ஆனால், பொது மக்களின் வாக்குகள் மட்டும் அவர்களுக்கு தேவைப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

சட்ட முன் வடிவங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் கேரள ஆளுநர் மீது மாநில அரசு

 உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது வழக்கு

புதுடில்லி, நவ.9 கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக கேரள அரசு குற்றம் சாட்டியது. இது தொடர்பாக கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த 1-ஆம் தேதி தாக்கல் செய்த ரிட் மனுவில் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்ளிட்ட 8 மசோதாக்கள் ஆளுநரிடம் பல மாதங்களாக நிலுவையில் உள்ளதாகவும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் காலதாமதம் செய்து வருவ தாகவும் குற்றம் சாட்டியது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்ட மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ரிட் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மசோதாக் களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தர விடக்கோரி மேலும் ஒரு ரிட் மனு கேரளா அரசு சார்பில் இன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment