புனரமைப்புப் பணி: வள்ளுவர் கோட்டம் மூடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 14, 2023

புனரமைப்புப் பணி: வள்ளுவர் கோட்டம் மூடல்

சென்னை,நவ.14- புனரமைப்புப் பணி கார ணமாக, சென்னையின் முக்கிய அடையாளங் களில் ஒன்றான வள்ளு வர் கோட்டம் தற்காலிக மாக மூடப்பட்டுள்ளது.

ஒரு சில மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் மக்கள் பார்வைக்கு மீண் டும் திறக்கப்படவுள்ளது.

திருக்குறளையும் திருவள்ளுவரின் பெருமையையும் போற்றும் வகையில், தி.மு.க. ஆட்சிக் காலத் தில் சென்னையில் வள் ளுவர் கோட்டத்துக்கு அடிக்கல் நாட்டப் பட்டது.

நெருக்கடி நிலை கார ணமாக, வள்ளுவர் கோட் டத்தை அப்போதைய குடியரசுத் தலைவர் பக் ருதீன் அலி அகமது திறந்து வைத்தார். அதன் பிறகு, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், வள் ளுவர் கோட்டம் புதுப் பிக்கப்பட்டது. வள்ளுவர் கோட்டத்தின் அமைப்பு திருவாரூர் தேர் போன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேரை இரண்டு யானைகள் இழுத்துச் செல்வது போன்று வடி வமைக்கப்பட்டிருக்கும். 39 மீட்டர் உயரம் கொண்ட இந்தத் தேரில் திருக்குறளில் இருக்கும் 133 அதிகாரங் களும் பொறிக்கப்பட் டுள்ளன.

மேலும், உச்சியில் திரு வள்ளுவரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வள்ளு வர் கோட்டத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள கலையரங்க வளாகத்தில், 1330 குறள்களும் எழுதப் பட்டுள்ளன.

புனரமைப்புப் பணி

கடந்த சில ஆண்டு களாக வள்ளுவர் கோட் டமானது பொலிவின்றி காட்சி அளித்தது. இதை தொடர்ந்து, ரூ.80 கோடி யில் வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்படும் என்று பேரவையில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார். 

இதன்படி, வள்ளுவர் கோட்டத்தைப் புனர மைக்கும் பணிகளை பொதுப்பணித் துறை தொடங்கியுள்ளது.

தற்காலிகமாக மூடல்

இதன் காரணமாக வள் ளுவர் கோட்டம் தற்காலிக மாக மூடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்புப் பலகைகள் வள்ளுவர் கோட்டத்தின் அனைத்து வாயில்களும் வைக்கப்பட் டுள்ளன. வள்ளுவர் கோட் டத்தின் உட்புறத்தில் வண் ணம் பூசுவது, நிழற்கூரை கள் அமைப்பது உள் ளிட்ட பல்வேறு பணிகள் நடை பெற்று வருகின்றன. 

மேலும், வள்ளுவர் கோட்டத்தின் அசல் கட்ட மைப்பு மாறாமல் நவீன வசதிகளுடன் புனரமைக் கும்பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. நூலகம், கலந் துரையா டல் வசதிகள், ஒலி -_ ஒளி காட்சி, உணவகம், பொது மக்களுக்கான பிற வசதி களுடன் கலையரங்கம் என நவீன முறையில் புதுப் பிப்புப் பணிகள் தொடங்கி யுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு, ஒரு சில மாதங்களில் பொது மக்க ளின் பார்வைக்கு மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment