ஜம்மு - காஷ்மீரை பிரித்த ஒன்றிய அரசின் சட்டம் தோல்வி அமைதி நிலவவில்லை - தீவிரவாதிகளுடன் மோதிய நான்கு ராணுவ வீரர்கள் மரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 23, 2023

ஜம்மு - காஷ்மீரை பிரித்த ஒன்றிய அரசின் சட்டம் தோல்வி அமைதி நிலவவில்லை - தீவிரவாதிகளுடன் மோதிய நான்கு ராணுவ வீரர்கள் மரணம்

காஷ்மீர், நவ.23 ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.இதுகுறித்து பாதுகாப்பு படையினர்கூறியதாவது: 

ஜம்மு-_காஷ்மீர் ரஜோரி மாவட்டம் தர்மசாலில் பாஜி மால் பகுதியில் தீவிரவாதிகள் மறைவிடம் குறித்த தகவலை யடுத்து அந்த பகுதியை நேற்று (22.11.2023) முற்றுகையிட்டு ராணுவ வீரர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது, தீவிரவாதிகளுக் கும், பாதுகாப்பு படையின ருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடை பெற்றது. கெட்ட வாய்ப்பாக இந்த மோதலில் இரண்டு ராணுவ கேப்டன்கள் மற்றும் இரண்டு வீரர்கள் என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த வீரர் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவ மனை யில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

பாஜிமாலில் தாக்குதல் நடத்திய தீவிவராதிகளில் இரு வர் வெளிநாட்டைச் சேர்ந்த வர்கள் என்பது கண்டறியப் பட்டுள்ளது. அவர்கள் வழி பாட்டு தலத்தில் தஞ்சமடைந் துள்ளனர். நிலைமையை சமா ளிக்க கூடுதல்படைகள் வர வழைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். எல்லை யோர மாவட்டங்களான ரஜோரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பயங்கரவாத நிகழ்வுகள் அதி கரித்து வருகின்றன


No comments:

Post a Comment