மருத்துவத்தில் முதுநிலை படித்தவர்களுக்கு ஓராண்டு கட்டாயப் பணி - அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 3, 2023

மருத்துவத்தில் முதுநிலை படித்தவர்களுக்கு ஓராண்டு கட்டாயப் பணி - அரசு உத்தரவு

சென்னை. நவ. 3-  தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவம் படித்த பிறகு கட்டாயம் பணியாற்ற வேண்டிய ஒப்பந்த காலம் ஓராண்டாக குறைக்கப்பட்டு உள்ளது. 

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகி றது. அந்த ஒதுக்கீட்டின் கீழ், தமிழ்நாட்டில் எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை இடங் களைபெற்றவர்கள், தங்களது படிப்பைநிறைவு செய்த பின், 2 ஆண்டுகளுக்கு அரசு மருத்துவ மனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயம். இவர்களது கட்டாய பணிக் காலத்தில், மகப்பேறு விடுப்பு போன்றவை இல்லை. இந் நிலையில், முதுநிலை மருத்து வம் படித்த மாணவர்களுக்கான ஒப்பந்த காலத்தை, 2 ஆண்டு களுக்கு பதிலாக, ஓராண்டாக குறைத்து சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அரசாணை வெளியிட்டுள்ளார். 

அந்த அரசாணையில், “முது நிலை மருத்துவ மாணவர்களின் ஒப்பந்த காலத்தில் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் கட்டாய சேவை என்பது, தற் போது ஓராண்டாக குறைக் கப்பட்டுள்ளது. அதற்கான ஒப் பந்ததை மீறும்போது செலுத்த வேண்டிய அபராதத் தொகை ரூ.40 லட்சத்தில் இருந்துரூ.20 லட்சமாக குறைக்கப்படுகிறது. 

முதுநிலை மருத்துவத்துக்கு பின்னர், முதுநிலை பட்டய படிப்பு நிறைவு செய்தவர்களுக்கு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக குறைக்கப்பட்டுள் ளது. இந்த புதிய விதி தேவையின் அடிப்படையில் ஆண்டுதோறும்  மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். தேவைப்பட்டால் 2 ஆண்டுக ளுக்கு அரசு சேவையாற்றவும் வலியுறுத்தப்படும்” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment