பி.ஜே.பி. தேசிய தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம் தோல்வி அடைந்த புதுச்சேரி மாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 18, 2023

பி.ஜே.பி. தேசிய தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம் தோல்வி அடைந்த புதுச்சேரி மாடல்

சென்னை,நவ.18- புதுச்சேரியில் காங்கிரஸ், தி.மு.க.,வை உடைத்து, பா.ஜ., கூட்டணி ஆட்சியை உருவாக்கியும், அம்மாநிலத்தில் கட்சிக்கு எந்தப் பலனும் இல்லை என்றும், 'புதுச்சேரி மாடல்' தோல்வி அடைந்து விட்டது என்றும், அக்கட்சி மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது.

கடந்த, 2014 முதல் ஒன்றியத் தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கும் நிலை யிலும், புதுச்சேரியில், 2021 வரை, காங்கிரஸ் ஆட்சியே நடந் தது. ஆட்சியிலிருந்து காங்கிரசை அகற்றி விட்டு, பா.ஜ., இடம் பெறும் ஆட்சியை உருவாக்க, பா.ஜ., திட்டமிட்டது.

அதன்படி, காங்கிரஸ் மூத்த தலைவரான நமச்சிவாயம் தன் அமைச்சர், சட்டமன்ற உறுப் பினர் பதவியிலிருந்து விலகி விட்டு, பா.ஜ.,வில் இணைந்தார். அவரை தொடர்ந்து, காங்கிரஸ், தி.மு.க., - சட்டமன்ற உறுப்பி னர்கள் சிலரும் பா.ஜ.,வில் இணைந்தனர்.

பின், 2021 சட்டமன்ற தேர்தலில், என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, பா.ஜ., போட்டியிட்டது. 

இதில், 10 இடங்களில் வென்ற என்.ஆர்.காங்கிரஸ், ஆறு இடங்களில் வென்ற பா.ஜ., ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிமுதலமைச்சரானார்.

தென் மாநிலங்களில் கரு நாடகாவுக்கு அடுத்து, புதுச் சேரியில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்தது. இதை, புதுச்சேரி மாடல் என்று பா.ஜ.,வினர் அழைத்தனர். இதனால், புதுச் சேரியில் பா.ஜ., முக்கிய சக்தியாக வளரும் என்றும், அதன் தாக்கம் தமிழ்நாட்டிலும் எதிரொலிக் கும் என்றும் எதிர்பார்த்தனர்.

பா.ஜ., சட்டமன்ற உறுப்பி னர்களில் அமைச்சர் நமச்சிவா யம், சட்டமன்றத் தலைவர் செல்வம், ஜான்குமார், ரிச்சர்டு, கல்யாணசுந்தரம் ஆகியோர் காங்கிரஸ், தி.மு.க., என, வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள். இதனால், கட்சியும், ஆட்சியும் தனித்தனியாக செயல்படுகிறது.

ஆட்சி அதிகாரத்தில் இருப்ப வர்களும், பா.ஜ.,வில் இருப்பவர் களும் இணைந்து செயல்படும் சூழல் உருவாகவில்லை. இந்த காரணங்களால், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளா கியும், புதுச்சேரியில் பா.ஜ., முக்கிய சக்தியாக வளரவில்லை.

சமீபத்தில், தென் மாநிலங் களில் பா.ஜ.,வின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்திய, பா.ஜ., தேசிய தலைவர்நட்டா, அமைப்பு பொதுச்செயலர் சந் தோஷ் உள்ளிட்டோர், புதுச் சேரி மாடல் தோல்வி அடைந்து விட்டதாக, அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

'புதுச்சேரி அரசில் பா.ஜ., இடம் பெற்றிருப்பதைப் பயன் படுத்தி, அங்கு கட்சியை பலப் படுத்தியிருக்கலாம். ஆனால், கட்சி எப்போதும் போலவே உள்ளது.

'திரிபுராவில், பா.ஜ., ஆட்சி அமைத்ததன் தாக்கம் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்திலும் எதிரொலித்தது. 

அதுபோல, நினைத்தபடி புதுச்சேரி மாடல் வென்றிருந் தால், தமிழ்நாட்டிலும் பா.ஜ., வுக்கு கை கொடுத் திருக்கும்' என, பா.ஜ., மேலிடத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக, புதுச்சேரி பா.ஜ., நிர்வாகிகள் சிலர் கூறு கையில், 'புதுச்சேரியில் வன்னி யர், மீனவர், தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்தினரே அதிகம். இந்த சமூகங்களைச் சேர்ந்த ஒருவரை, மாநில தலைவராக நியமித்து, கட்சியை பலப்படுத்தியிருந்தால், எதிர்பார்த்த விளைவு ஏற்பட்டி ருக்கலாம்.

'அந்த வாய்ப்பை பா.ஜ., தவறவிட்டு விட்டது. வன்னியர், மீனவர், தாழ்த்தப்பட்டோர் சமுதாயங்களின் ஆதரவை பெற முடியாததால், புதுச்சேரியில் பா.ஜ., முக்கிய சக்தியாக உரு வாகவில்லை' என்றனர்.


No comments:

Post a Comment