‘தீபாவளி' பட்டாசு வெடிப்பால் தமிழ்நாடு முழுவதும் மோசமான காற்று மாசு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 12, 2023

‘தீபாவளி' பட்டாசு வெடிப்பால் தமிழ்நாடு முழுவதும் மோசமான காற்று மாசு!

சென்னை, நவ.12 தீபாவளியை யொட்டி பட்டாசு வெடித்ததால் காற்று மாசு தமிழ்நாடு முழுவதும் கடுமையான அளவில் மோசமடைந் துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு பட் டாசுகளை வெடிக்க நேரக் கட்டுப் பாடும் விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதி மன்ற உத்தரவின்படி, தமிழ்நாட்டில் தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங் கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி உள்ளது.

இதனை மீறினால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என எச் சரிக்கப்பட்டுள்ளது. டில்லி உள்ளிட்ட பெருநகரங்களில் காற்று மாசு பெரும் பிரச்சினையாக உருவாகி உள்ள நிலையில் இதுபோன்ற கட்டுப் பாட்டை அரசு கடந்த சில ஆண்டு களாக விதித்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் இன்று (12.11.2023) தீபாவளி கொண்டாடப் பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாள்களாகவே மக்கள் பட் டாசு வெடிக்கத் தொடங்கிவிட்டனர்.

அதிக அளவிலான பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்றே (11.11.2023) காற்று மாசு கடுமையாக அதிகரித்து இருந்தது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த 10.11.2023 அன்று முதலே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக் கத் தொடங்கி உள்ளதால் காற்று மாசு கடுமையாக அதிகரித்து. குறிப்பாக நேற்று (11.11.2023) இரவு தொடங்கி இன்று (12.11.2023) வரை விடிய விடிய பட்டாசுகளை மக்கள் வெடித்து தள்ளி வருகிறார்கள்.

இதன் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுமாசு தரக்குறியீடு 100 முதல் 200 வரை பதிவாகியுள்ளது. சென்னையில் காற் றின் தரம் மிதமான மாசு என்ற நிலைக்குச் சென்று இருக்கிறது. சென்னை பெருங்குடியில் - 178, அரும்பாக்கம் - 159, மணலி - 152, ராயபுரம் - 115, கொடுங்கையூர் - 112, ஆலந்தூர் - 102 என அதிகரித்து இருக்கிறது. கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு தரக் குறியீடு 231 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மட்டு மின்றி வெளி மாவட்டங்களிலும் காற்று மாசு மோசமடைந்து இருக் கிறது.

கடலூர் - 155, வேலூர் - 122, சேலம் - 122, புதுச்சேரி - 147 என்ற அளவில் காற்று மாசு தரக் குறியீடு உயர்ந்து இருக்கிறது. காற்று மாசு அளவு அதிகரித்து உள்ளதால் ஆஸ் துமா போன்ற நோய் பாதிப்பு உள்ள வர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட லாம் எனவும், இதய நோய் பாதிப்பு கொண்டவர்கள், குழந்தைகள் மற் றும் பெரியவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படலாம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச் சரித்துள்ளது.

No comments:

Post a Comment