ஜப்பானில் தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 9, 2023

ஜப்பானில் தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்கள்

டோக்கியோ,,நவ.9- தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் முன்னெ டுப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இருந்து பல்வேறு போட்டிகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளி  மாணவர்கள் 50 பேர் கல்விச் சுற்றுலாவுக்காக ஜப்பான் வந்த டைந்தனர். நிகழ்விற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை தந்தார். நிகழ்விற்கு முன்னதாக ஜப்பானில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அமைச்சர் சென்று பார்வையிட்டார். 

நவம்பர் 7 அன்று அரசுப்பள்ளி மாணவர்கள் ஜப்பானில் வாழும் தமிழர்களை சந்தித்து உரையாடல் நிகழ்த்தும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா பார்த்தசாரதி அரசு பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களையும், ஆசிரியர் களையும், மாணவர்களையும் வரவேற்றார்.

"திரைகடல் ஓடியும்" என்ற தலைப்பில் ஜப்பானில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வரும் மேனாள் அரசு பள்ளி மாணவர்களின் அறிமுக காணொலி ஒளிபரப்பப்பட்டது.

அரசு பள்ளியில் படித்து முதல் தலைமுறை பட்டதாரியாக உருவாகி  உலகளவில் திறம்பட பணிபுரியும் தமிழர்கள் தற்போது கல்விச் சுற்றுலாவிற்காக வந்திருக் கும் மாணவர்களிடம் தங்களது பணி அனுபவம், மற்றும் ஜப்பா னிற்கு படிக்க அல்லது வேலைக்காக வருவோர்க்கு தேவையான அடிப் படை விசயங்களை பகிர்ந்து கொண்டனர். 

ஜப்பானில் உள்ள கல்வி, வேலை வாய்ப்புகளை பற்றி பிரசன்னா பார்த்தசாரதி,  கணேஷ் பாண்டியன் நமசிவாயம்,  குமரவேல் திருமணஞ்சேரி, ஆசிரியை கண்மணி கோவிந்த சாமி, ராஜேஷ்குமார், கலைச் செல்வம், பொன்னி வளவன் உள் ளிட்டோர் பகிர்ந்து கொண்டனர். பின்னர், ஜப்பான் தமிழர்கள் மூலம் சிறப்பான பறையாட்டம், கும்மி யாட்டம் உட்பட்ட கலை நிகழ்ச் சிகள் நடத்தப்பட்டது. 

தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்கள் டோக்கியோவில் உள்ள மிராய்க்கன் தேசிய அறிவியல் அருங்காட்சியத்திற்கும், ஜப்பானில் உள்ள பள்ளிகளுக்கும் சென்று வந்தனர். அதனைத் தொடர்ந்து நானோ தொழில் நுட்பத்தில் உலகளவில் சிறந்து விளங்கும் தோயோ பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மூன்று மணி நேரம் செலவிட்டு அறிவியலின் நேரடி பயன்பாட்டை கற்றறிந்தனர். 

இதற்கான ஏற்பாட்டை  JTPEN அமைப்பினர் செய்து கொடுத்தனர். 

அமைச்சர் அன்பில் மகேஷ் இத்திட்டத்தின் சாராம்சம், மற்றும் மாணவர்கள் இதன் மூலம் பெரும் பயன்கள் குறித்தும் தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறையின் முன்னெ டுப்புகளை பற்றியும் விவரித்தார். 

Japan Tamil Professionals & Expats Network (JTPEN) அமைப்பு, ஜப்பானில் கல்லூரி மற்றும் மேற் படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு களை குறித்து விவரித்தது. மேலும் தமிழ்நாடு அரசின் "நான் முதல்வன்" திட்டத்துடன் இணைந்து பணி புரிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. நிகழ்வை கலைச்செல்வன் பழனி தொகுத்து வழங்கினார். 

இந்நிகழ்வில் சுமார் 250க்கும் மேற்பட்ட ஜப்பான் வாழ் தமிழர்கள் கலந்து கொண்டனர்.  இறுதியாக நன்றி யுரை மற்றும் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.


No comments:

Post a Comment