ஆர்.எஸ்.எஸ். கூடாரமா? ஆளுநர் மாளிகையா? ஆளுநருக்கு சட்டமன்றத்தில் பல்வேறு கட்சிகள் கண்டனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 19, 2023

ஆர்.எஸ்.எஸ். கூடாரமா? ஆளுநர் மாளிகையா? ஆளுநருக்கு சட்டமன்றத்தில் பல்வேறு கட்சிகள் கண்டனம்!

சென்னை, நவ.19 ஆளுநருக்கு சட்டமன்றத்தில் நேற்று (18.11.2023) பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சி செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு முதலமைச்சர் முன்மொழிந்த தனித் தீர்மானத்தின் மீது பேசுகையில், சட்டமன்ற உறுப் பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேசிய தாவது:-

"சமூக நீதியை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ராஜ்பவனை ஒரு ஆர்.எஸ்.எஸ். கூடாரமாக மாற்றி வரு கிறார். அண்ணா பல் கலைக்கழகம் அவரு டைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு பல் வேறு ஊழல்கள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதைப் பற்றி ஆளுநர் பேசுவாரா?

தமிழ்நாடு மக்களின் கோபத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளாகியுள்ளார். ஆளும் அரசின் மீது வன்மத்தோடு செயல்பட்டு வருகிறார். ஆளுநரின் நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையோடு மன்னித்து வருகிறார். முதல மைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி சார்பில் முழுமையாக ஆதரிக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்." 

இவ்வாறு  சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை பேசினார்.

வி.சி.க. சிந்தனைச்செல்வன்

வேந்தராக ஆளுநர் இருக்கக் கூடாது என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும் என சிந்தனைச்செல்வன் தெரிவித்தார்.

"சொந்த ஜாதி, மத நலனை விரும்புபவர் களால் தேச நலனுக்கு ஆபத்து என அம்பேத் கர் பேசியதை நினைவு கூறுகிறேன். இந்திய அளவில் மிகப்பெரிய ஆளுமையாக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உருவெடுத்துள்ளார்.

9 கோடி மக்களின் உரிமைக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு என்ற பெயரை தக்கவைத்துக் கொள்ளவே போராட வேண்டியுள்ளது. ஆளுநரின் நடவடிக்கை இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு நேரடியாக விடுக்கப்பட்டுள்ள சவால். அரசமைப்புச் சட்டம் வேந்தர் என்ற பொறுப்பினை ஆளுநருக்கு வழங்கவில்லை. வேந்தராக ஆளுநர் இருக்கக் கூடாது என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும்."

ம.ம.க. ஜவாஹிருல்லா 

"தமிழ்நாடு மக்க ளின் நலனுக்காக நாம் இயற்றக்கூடிய சட்ட முன்வடிவுகளை நிறுத்தி வைப்பதற்கு ஆளு நருக்கு எந்த அதிகார மும் இல்லை. மக்கள் நல னுக்காக இயற்றப்பட் டுள்ள கோப்புகளை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுத்தது சர்வாதிகாரத்தின் உச்சம்.

மசோதாக்களை நிறைவேற்றாமல் ஆளுநர் கிடப்பில் போட்டது தொடர்பாக முதல் அமைச்சர் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது வரவேற்கத்தக்கது.

இந்த பிரச்சினை இதோடு நின்றுவிடக்கூடாது. அறிஞர் அண்ணா கூறியதுபோல ‘‘ஆட்டுக்கு தாடி தேவையில்லை.. நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை'' என்ற திசையை நோக்கி செல்லும்போதுதான், ஒன்றிய அரசின் பிரதிநிதியாக வரக்கூடிய சர்வாதி காரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்." 

த.வா.கட்சி வேல்முருகன் 

இந்திய அரசமைப்புச் சட்டம் உட்பிரிவு 200 இன் கீழ் சட்டங்களை இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப உள்ளோம். இப் படி அனுப்பும் சட்டத்துக் கான முன்வடிவை முத லமைச்சர் மு.க.ஸ்டா லின் வாசித்துள்ளார். இந்த முன்மொழிவு என்பது தமிழ்நாடு மக் களின் உணர்வுகளை யும், வாக்களித்து ஆட்சி அதிகாரத்தில் அமர்த்திய தமிழ்நாடு மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றத் தவறிய ஆளுநரை நீங்கள் குறிப் பிட்டது போல் அரசியல் ரீதியாக, அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு கருத்துரையின்பால் இந்த தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். முதலமைச்சர் தீர்மானத்தை தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் சார்பில் வரவேற்கிறேன்.

இந்த 10 மசோதாவையும் ஆய்வு செய்து நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு எமது கட்சியின் சார்பிலும் மக்களின் சார்பிலும், ஜனநாயக மக்களின் சார்பிலும், இந்திய அரசமைப்பு சட்டங்களை ஏற்றுக்கொண்டு நடக்கும் மக்களின் சார்பிலும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்து கொள்கிறேன். உச்சநீதிமன்றம் இதில் தலையீட்டு தமிழ்நாடு முதலமைச்சர், பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதியரசர் மிகச்சரியாக ஆளுநர் என்று சொல்லக்கூடியவர்களை சுட்டியும், குட்டியும் காட்டி உள்ளனர்.

முதலமைச்சர் சொன்னது போல் அவர்களை கொட்டு வைத்தாலும் ஏற்கிற மனம் போல் ஏதோ ஒரு சித்தாந்தம், சிந்தனையின் அடிப்படையில் ஆளுநராக பொறுப்பேற்று கொண்டு தொடர்ச்சியாக அவரது நடவடிக்கை என்பது ஜனநாயக மாண்புகளுக்கு எதிராக உள்ளது. 7 கோடி மக் களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மற்றும் எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட முன்வடிவுகளை அவர் குப்பையில் போடுவது போல் அமைதி காக்கிறார். ‘‘நான் காத்திருப்பு பட்டியலில் வைத்திருந்தால் அது காலாவதியானது போலாகும்'' என பேசுகிறார்.

தமிழ்நாட்டு லட்சிணையை தூக்கி ஏறிகிறார். தமிழ்நாடு என்ற பெயரை தூக்கி எறிகிறார். தமிழ்நாடு, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் என்றால் கசக்கிறது. சமூக நீதி என்ற வரியை படிக்க மறுக்கிறார். உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டிய பிறகு அவர் திருப்பி அனுப்பியுள்ளார். முதலமைச் சரால் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாக்கள் மக்களுக் கானது. மண்ணுக்கானது. குறிப்பாக கல்வி, ஆராய்ச்சி, மருத்துவமனை போன்ற சட்டங்களை எந்த காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் ஆளுநர் திருப்பி அனுப்புகிறார் என்பதை நாடே அறியும். இந்த 10 மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதால் ஆளுநருக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர வேறு வழியில்லை. ஆளுநர் ஆர்என் ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை - தவிர வேறு வழியில்லை.''

கொ.ம.தே.க. கொங்கு ஈஸ்வரன்!

எய்தப்பட்ட வேகத்தை விட அம்பு கொஞ்சம் ஓவராக ஆடுகிறது தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்தோ, தமிழ்நாடு அர சின் நலத்திட்டங்கள் பற்றியோ ஒரு நாளாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையோ, அமைச்சர்களையோ அழைத்து ஆளுநர் ரவி பேசியிருப்பாரா?

தமிழ்நாட்டிற்கு தனது பதவிக்காலத்தில் இந்த நல்லதை நான் செய்திருக்கிறேன் என ஆளுநர் ரவியால் சொல்ல முடியுமா? ஆளுநர்கள் இடையூறு செய்வது இன்று நேற்றல்ல 60 ஆண்டுகால பிரச்சினையாக உள்ளது. தமிழ்நாடு அரசின் திட்டங்களை, தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டங்களை முடக்குவதற்கு என்ன காரணம் என்பதைக் கூட ஆளுநர் ரவியால் சொல்ல முடியவில்லை.

மதிமுக சதன் திருமலைக்குமார்

“15 ஆவது சட்டப்பேரவை, 16 ஆவது சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றிய 10 தீர்மானங்களை ஆளுநர் அவர்கள் கிடப்பில் போட்டு விட்டு இப்போது திருப்பி அனுப்பி இருப்பது நம்முடைய சட்டமன்றத்தை மட்டுமின்றி தமிழ்நாட்டில் வாழும் மக்களையும் அவமானப்படுத்துவதாக தெரிகிறது. சமத்துவம், சமூக நீதி என்று தமிழ்நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கு இது ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.

இந்த சட்டத் திருத்தங்கள், பல்கலைக்கழக சட்டத் திருத்தங்கள் மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப் படுகின்றன என்று முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நான் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன். அரசமைப்புச் சட்டப்படி முதலமைச்சர் தலைமையில் இருக்கும் அமைச்சரவை முடிவை ஏற்று செயல்படுவதே ஆளுநரின் கடமை. அதை செய்யத் தவறிய ஆளுநர் அவர்கள் பதவி விலகி ஓட வேண்டும்.

“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்” என்று வள்ளுவர் சொன்னது போல் அவர் நல்ல ஆலோசகர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு மீண்டும் நம்முடைய முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிப்பதோடு, நம் நாட்டின் விடுதலைக்காக போராடிய தோழர் சங்கரய்யாவுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் கொடுப்பதைக் கூட ஏற்றுக்கொள்ளாத இந்த ஆளுநரை நான் கண்டித்து அமர்கிறேன்.” என்றார்.

சி.பி.எம். நாகை மாலி

‘‘ஜனநாயக மாண்புகளை புறந்தள்ளிவிட்டு செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி போல் எந்த மாநிலத்திலும் ஆளுநர் இல்லை. எந்தவித அதிகாரமும் இல்லாத ஒருவர் சகலவித மான அதிகாரத்தையும் கையில் எடுப்பேன் என்பதை இனி மேலும் அனுமதிக்கக் கூடாது'' என்று நாகை மாலி தெரி வித்திருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 

தளி ராமச்சந்திரன்

 ஆளுநரை தங்கள் கருவியாக வைத்துக் கொண்டு ஒன்றிய அரசு, மாநில அரசுகளை முடக்கி வருகிறது. ஆளுநர் தமது அலுவலகத்தை ஆர்.எஸ்.எஸ். அலுவலகமாக மாற்றி செயல்பட்டு வருகிறார். மாநில அரசுகளின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் செயல்படும் ஆளுநரை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.

இவ்வாறு பல்வேறு அரசியல் கட்சிகளின் சட்டமன்ற உறுப் பினர்கள் தமிழ்நாடு ஆளுநருக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment