குடுமிப்பிடி சண்டை சீட்டுக்குலுக்கிப் போட்டு எதிர்கட்சித்தலைவர் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 19, 2023

குடுமிப்பிடி சண்டை சீட்டுக்குலுக்கிப் போட்டு எதிர்கட்சித்தலைவர் நியமனம்

கருநாடகாவில் பாஜகவின் பரிதாபம்

பெங்களூரு நவ 19 கருநாடகா வில் சட்டமன்றத் தேர்தல் கடந்த மே மாதம் முடிவுற்றது. மோடியின் பல கிலோமீட்டர் சாலைவழி ஊர் வலம், உள்ளிட்ட பல தந்திரங் களைக் காட்டியும் கருநாடகாவில் பாஜக படுதோல்வி அடைந்தது. கருநாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக இடங்களை கைப் பற்றி வெற்றி வாகை சூடியது. அதா வது 223 தொகுதிகளில் போட்டி யிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள் ளது. கருநாடக முதல மைச்சராக சித்தராமையாவும், துணை முதல மைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப் பட்டனர்.

இந்த நிலையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த பாஜகவில் எதிர்கட்சி தலைவரை தேர்ந் தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. 

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப் படாதது நடந்துகொண்டு இருக்கும் 5 மாநிலத்  தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் சீட்டுக் குலுக்கிப் போட்டதில் கட்சியில் புதிய முகமும் தொகுதியில் கூட பலருக்கு நன்கு அறிமுகம் ஆகாத பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.அசோகா கருநாடகா சட்டமன்ற எதிர்க்கட்சி தலை வராக தேர்வு  செய்யப்பட்டுள் ளார். கருநாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மே மாதம் வெளியான நிலையில், 6 மாதங்கள் கழித்து எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment