திருவாரூரில் திராவிட மாணவர் கழகம் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 23, 2023

திருவாரூரில் திராவிட மாணவர் கழகம் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

 மத்திய பல்கலைக்கழகமா? சங்பரிவாரின் கிளைக்கழகமா? ஜெய்சிறீராம் என்று பதாகைகள் வைப்பதா?

திருவாரூர்,நவ.23- திருவாரூரில் ஒன்றிய அரசின் நிர்வாகத்தின்கீழ் இயங்கிவருகிறது மத்திய பல்கலைக்கழகம். திருவாரூரில் இப்பல்கலைக்கழகம் அமைவதற்கு கலைஞர் பெருமுயற்சி எடுத்து தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் மத்திய பல்கலைக்கழகம் ஒன்று இயங்குவதற்கு காரணமாக இருந்தார். 

தற்பொழுது ஒன்றியத்தில் பாஜக அரசு அமைந்தது முதல் கல்வி நிறுவனங்களில் ஹிந்துத்துவாவைப் புகுத்துவதுடன், ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் துணையுடன் ஹிந்துத்துவா பயங்கரவாத கொடுங்கரங்களால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை கேள்விக்குரியதாக ஆக்கி வருகிறது.

ஆரிய கலாச்சாரத்தைத் திணிக்கின்ற வகையில் கல்வி நிறுவனத்தில் தீபாவளி போன்ற இந்து மதப் பண்டிகைகளைக் கொண்டாடுவதன் பெயரால் "ஜெய்சிறீராம்" முழக்கங்களை எழுப்புவதும், பதாகைகளை வைப்பதும் போன்ற செயல்களில் பல்கலைக்காக நிர்வாகமே துணிந்து ஈடுபட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரே அதனை முன்னின்று நடத்துவதும் கேலிக்கூத்தான ஒன்றாகும்.

மேலும் பல்கலைக் கழக நிதியிலிருந்து செலவு செய்வது சட்டப்படி சரியானது தானா?

மதச்சார்பற்ற அரசின் கல்வி நிறுவனமாக திகழ வேண்டிய திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில்,  மாணவர்கள் மத்தியில் பழைமைவாதங்களைத் திணிப்பதும், ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பதும், கல்வி அறிவை போதிக்க வேண்டிய இடத்தில் மதவாத நச்சுகளைப் பரப்பத் திட்டமிட்டு செயலாற்றி வருவதும் கண்டு மாணவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

பல்வேறு மாணவர் அமைப்புகள் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன.

திராவிட மாணவர் கழகம் சார்பில் இன்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள், கழகப் பொறுப்பாளர்கள், பல்வேறு அமைப்பினர் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையில் இன்று (23.11.2023) காலை நீலக்குடியில் அமைந்துள்ள திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாணவர் கழக மாவட்ட தலைவர் கே.அழகேசன் வரவேற்றார்.

சட்டக்கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் தொடக்க உரையாற்றினார்.

திருவாரூர் திராவிட மாணவர் கழக பொறுப்பாளர் வே.நர்மதா, திராவிடர் கழக மாநில கிராமப்பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் கண்டன உரையாற்றினார்கள். அ.ஜெ. உமாநாத் (மாவட்ட கழக இளைஞரணி துணை செயலாளர்) நன்றியுரை கூறினார்.

மாநில மாணவர் கழக துணை செயலாளர் சு.இனியன், தலைமைக்கழக அமைப்பாளர்கள் சு.கிருஷ்ணமூர்த்தி, குடந்தை க.குருசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் க.வீரையன், திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராஜ், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.எ. நெப்போலியன், மாவட்ட செயலாளர் புபேஷ் குப்தா, சித்தார்த்தன், இளையராஜா, க.சி.ராஜா, ராஜ்மோகன், அறிவழகன், தமிழவன், சிவராமன், சாமிநாதன் (எ) செல்லப்பா, பா. நாகராஜன், சரவணன், ஏகாம் பரம், சிவக்குமார், பி. ரெத்தினசாமி, கே.டி.வி. இளங்கோவன், பாண்டுரெங்கன், சின்னதுரை, ஆறுமுகம், சங்கர், துரைராஜன், எஸ். முருகையன், ஜெ. லெனின், குபேரன், ராஜேந்திரன், சிவக் குமார், தனராஜ், அம்பேத்கர், ப. ஆறுமுகம், சுபாஷ், அ.ஜெ. உமாநாத். உள்பட ஏராளமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment