பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 24, 2023

பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

கோவை, நவ.24  நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கனமழையின் காரணமாக, 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் நேற்று (23.11.2023) ஒரே நாளில் 12 அடி அதிகரித்து, 89 அடியாக உயர்ந்தது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பில்லூர் அணை, காரமடை அருகே நீலகிரி மலை யடிவாரத்தில் அமைந்துள்ளது. தொடர் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து நேற்று அதி கரித்தது. 23.11.2023 அன்று இரவு கொட்டித் தீர்த்த கன மழையால், பில்லூர் அணையின் நீர்மட்டம் 77 அடியில் இருந்து 89 அடியாக உயர்ந் தது. ஒரே நாளில் 12 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அணையில் இருந்து மின் உற்பத்தி செய்ய விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பவானியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் பொது மக்கள் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல் மூலம் ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என வருவாய்த் துறை யினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:

Post a Comment