'இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும்' திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியது!அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 29, 2023

'இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும்' திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியது!அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, நவ. 29- தமிழ்நாட்டில் ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ திட்டத்தில் பயனா ளிகள் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.

அவர்களது சிகிச்சைக்காக தமிழ்நாடு அரசு ரூ.173.77 கோடி வழங்கியுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விபத்து உயிரி ழப்புகளை தடுக்கும் நோக்கில் ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ என்ற திட்டம் கடந்த 2021 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதன்படி, தமிழ்நாடு எல் லைக்குள் நிகழும் சாலை விபத் துகளில் சிக்கி மருத்துவமனை யில் சேர்க்கப்படுபவர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.

சமீபத்தில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் ஒருவர், சென்னை குரோம்பேட் டையில் உள்ள ரேலா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ திட்டத்தின் 2 லட்ச மாவது பயனாளியான அவரை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் நேற்று (28.11.2023) சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது,

“தமிழ்நாட்டில் 455 அரசு மருத் துவமனைகள், 237 தனியார் மருத் துவமனைகள் என மொத்தம் 692 மருத்துவமனைகளில் இத்திட்டத் தின்கீழ் அவசர சிகிச்சை அளிக் கப்படுகிறது.

இத்திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை தற்போது 2 லட் சத்தை கடந்துள்ளது. இந்த 2 லட்சம் பேருக்காக தமிழ்நாடு அரசு இதுவரை ரூ.173.77 கோடி வழங்கியுள்ளது” என்றார்.

தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காம ராஜ், சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு சுகா தார அமைப்பு திட்ட இயக்குநர் கோவிந்தராவ், ரேலா மருத்துவ மனை இயக்குநர் முகமது ரேலா, தலைமை நிர்வாக அலுவலர் இளங்குமரன் கலியமூர்த்தி, இணை இயக்குநர் ரவிபாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முதலமைச்சர் காப்பீடு திட்ட முகாம்

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட் டம், ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் இணைந்து செயல்படுத்தப்படுகின்றன. 

தமிழ்நாட்டில் கடந்த 2009இல் தொடங்கப்பட்டு, இதுவரை 1.45 கோடி குடும்பங்கள் இத்திட்டத் தில் மருத்துவக் காப்பீடு அட்டை பெற்றுள்ளன.

விடுபட்ட குடும்பங்களும் இதில் சேர்வதற்காக, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, வரும் டிச.2-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment