திருநெல்வேலி - பாளையங்கோட்டை: மனுதர்ம யோஜனா எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டத்தில் மேனாள் சட்டப்பேரவைத் தலைவரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான இரா.ஆவுடையப்பன் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 4, 2023

திருநெல்வேலி - பாளையங்கோட்டை: மனுதர்ம யோஜனா எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டத்தில் மேனாள் சட்டப்பேரவைத் தலைவரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான இரா.ஆவுடையப்பன் உரை

 தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினுடைய கொள்கைகளைப் புகுத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள்!

ஒன்றிய அரசின் சூழ்ச்சிகளை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முறியடிக்கவேண்டும்!

இதுவே, ஆசிரியரின் தொடர் பரப்புரையின் முக்கிய நோக்கமாகும்!

திருநெல்வேலி, நவ.4 தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினுடைய கொள்கைகளைப் புகுத்தவேண்டும் என்ற வகையில் தான் பா.ஜ.க.வினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் கள். அதனைக் கண்டிக்கின்ற வகையிலும், தமிழ்நாட்டில் அவர்களுடைய கொள்கைகள் எடுபடாது என்பதை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முறியடிக்கவேண்டும் என்கிற உணர்வோடும், கருத்துகளை எடுத்துச் சொல் வதற்காகத்தான் ஆசிரியர் அய்யா அவர்கள் இங்கே வந்திருக்கின்றார்  என்றார் மேனாள் சட்டப்பேரவைத் தலை வரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான இரா.ஆவுடையப்பன் அவர்கள்.

திருநெல்வேலியில் 

இரண்டாம் கட்டப் பிரச்சாரம்

கடந்த 2.11.2023 அன்று மாலை குலத்தொழிலைத் திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்த்து  மனுதர்ம யோஜனா எதிர்ப்புப் தொடர் பரப்புரை பயணம் இரண் டாம் கட்ட பிரச்சாரமாக திருநெல்வேலியில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மேனாள் சட்டப்பேரவைத் தலைவரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான இரா.ஆவுடையப்பன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 

தொடர் பரப்புரைப் பயணம்!

அன்புள்ள பெரியோர்களே, அருமைத் தாய் மார்களே, அருமைச் சகோதரர்களே, வியாபாரப் பெரு மக்களே!

இன்றைய தினம் ஒன்றிய பா.ஜ.க. அரசினுடைய குலத்தொழிலைத் திணிக்கும் மனுதர்ம யோஜனா திட்டத்தை எதிர்த்துத் தொடர் பயணப் பிரச்சாரமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரப்புரையை மேற்கொண்டு வருகின்ற தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,

நிகழ்வில் கலந்துகொண்டிருக்கின்ற அருமை அண் ணாச்சி சுப.சீதாராமன் அவர்களே,

மேடையில் அமர்ந்திருக்கின்ற பெரியோர்களே, அன்புச் சகோதர, சகோதரிகளே உங்கள் அத்துணை பேருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய தினம் குலத்தொழிலைத் திணித்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க. ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெறும் இக்கூட்டத்திற்கு நாம் அனைவரும் வந்திருக்கின்றோம்.

எந்த அளவிற்கு பா.ஜ.க. ஒன்றிய அரசு, குலத் தொழிலை திணிக்கவேண்டும் என்கிற உணர்வோடு, ஜாதிப் பாகுபாடு என்றைக்கும் இருந்துகொண்டிருக்க வேண்டும் என்கிற உணர்வோடு அது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறித்தெல்லாம் இங்கே அய்யா ஆசிரியர் அவர்கள் விளக்கி உரையாற்ற விருக்கின்றார்.

படிப்பறிவு வந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்

இன்றைய தினம் குலத்தொழிலைத் திணிக்கவிருப்ப தன் நோக்கம் ஏன், எதற்கு? ஜாதிப் பாகுபாடு எப் பொழுதும் இருக்கவேண்டும் என்ற உணர்வோடு அவர் கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். படிப்பறிவு வந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

பகுத்தறிவு மக்களுக்கு வந்துவிடக்கூடாது; பகுத் தறிவு இல்லாத மக்களாக நாம் எல்லோரும் இருக்க வேண்டும் என்ற உணர்வோடு அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்; திட்டத்தைத் தீட்டிக் கொண் டிருக்கின்றார்கள்; அதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வடமாநிலங்களில், பகுத்தறிவுப் பேசுகின்ற தலைவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்!

பகுத்தறிவு குறித்துப் பேசுகின்ற தலைவர்கள் வட மாநிலங்களில் இன்றைய தினம் கொலை செய்யப்படு கிறார்கள் என்றால், அதற்குக் காரணம், அவர்களால் அங்கே பகுத்தறிவு மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

பன்சாரே, கல்புர்கி போன்ற பகுத்தறிவு நாயகர்களை யெல்லாம் வடமாநிலங்களில் கொலை செய்துவிடு கிறார்கள். அந்த அளவிற்கு, வெறிப்பிடித்த ஓர் ஆட்சி - ஜாதி பேதத்தை பாராட்டுகின்ற ஓர் ஆட்சி இன்றைய தினம் ஒன்றியத்தை ஆண்டுகொண்டிருக்கின்றது என்பதை நாம் உணரவேண்டும்.

தமிழ்நாட்டில் அவர்களுடைய 

கொள்கைகள் எடுபடாது!

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினுடைய கொள்கைகளைப் புகுத்தவேண்டும் என்ற வகையில்தான் பா.ஜ.க.வினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதனைக் கண்டிக்கின்ற வகையிலும், தமிழ்நாட்டில் அவர்களு டைய கொள்கைகள் எடுபடாது என்பதை நாம் அனை வரும் ஒன்று சேர்ந்து முறியடிக்கவேண்டும் என்கிற உணர்வோடும், கருத்துகளை எடுத்துச் சொல்வதற் காகத்தான் ஆசிரியர் அய்யா அவர்கள் இங்கே வந்திருக்கின்றார்

ஆசிரியர் அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகத்தின் சார்பாக வருக, வருக என வரவேற்று, விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு மேனாள் சட்டப்பேரவைத் தலைவரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான இரா.ஆவுடையப்பன் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment