ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 19, 2023

ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது..!

ஊட்டி, நவ.19   கோவை, நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன.

ரயில் பாதையோரத்தில் இருந்த மரங்கள் தண்டவாளத்தின் குறுக்கே சாய்ந்தன. மண் அரிப்பு ஏற்பட்டு ஜல்லிக்கற்கள் அடித்து செல்லப் பட்டன. மண் சரிவு காரணமாக கடந்த 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரையும், 9-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ரயில் பாதையை சீரமைக்கும் பணி முழு வதும் நேற்று (18.11.2023) முடிவ டைந்தது. 

இதைத்தொடர்ந்து மேட்டுப் பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரயில் 10 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் தொடங்கியது. 180-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று (19.11.2023) காலை உதகையை நோக்கி ரயில் புறப்பட்டு சென்றது. மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர், நவ.19 மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம்  (17.11.2023) 3332 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று (18.11.2023) காலை நிலவரப்படி விநாடிக்கு 4,165 கனஅடியாக அதி கரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட, நீர்வரத்து அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

நேற்று முன்தினம் 61.08 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 61.51 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 25.82 டிஎம்சியாக உள்ளது.



No comments:

Post a Comment