கல்வியும், மருத்துவமும் தான் 'திராவிட மாட'லின் இரு கண்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 8, 2023

கல்வியும், மருத்துவமும் தான் 'திராவிட மாட'லின் இரு கண்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, நவ.8 கல்வியும் மருத்துவமும் தான் 'திராவிட மாட'லின் இரு கண்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நான் முதல்வன், மருத்துவ காப்பீட்டு திட்ட செயல்பாடுகள் இருப்பதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, அவர் நேற்று (7.11.2023) வெளியிட்ட சமூக ஊட கப்பதிவில் கூறியிருப்பதாவது: 

"கல்வியும், மருத்துவமும்தான் 'திராவிட மாட'லின் இரு கண்கள் என்பதை நான் அடிக்கடி சொல் வதுண்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையில் வெளியான ஒரு செய்தி யில், ‘‘நான் முதல்வன் திட்டத் தின்கீழ் 3,300 அரசுப் பள்ளி மாணவர்கள் சிஎல்ஏடி (சிலிகிஜி) தேர்வெழுதுவதற்கான விண்ணப் பக் கட்டணம் ரூ.4 ஆயிரத்தை அரசே செலுத்தி, அவர்களுக்கு இலவசப் பயிற்சியையும் வழங்கவுள் ளது. நாட்டின்முதன்மை உயர் கல்வி நிறுவனங்களிலும், அரசின் உயர் பொறுப்புகளிலும் நமது மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக நாம் மேற் கொண்டு வரும் பல திட்டங்களில் ஒரு சிறுதுளிதான் இது” என கூறப்பட்டுள்ளது. 

மற்றொரு செய்தியில், ”நாட் டுக்கே முன்னோடியாக 2009-இல் கலைஞர், ஏழை எளியோரின் உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வழி காட்டினார். 2015-_2016இ-ல்தான் ஒன்றிய அரசு இப்படி ஒரு திட் டத்தை அறிமுகப்படுத்தியது.

விரிவான மருத்துவக் காப்பீடு

 தற்போது முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் நமது அரசு மருத் துவமனைகள் நாட்டிலேயே எந்த மாநிலமும் நிகழ்த்தாத சாத னையை நிகழ்த்திஉள்ளன. முதல மைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் பயனை டைந்தவர்களில் 50 சதவீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்” என தெரிவிக் கப்பட்டுள்ளது. இது நமதுகல்வி, மருத்துவத் துறைகளின் சாதனை களுக்கான சான்று மட்டுமல்ல; வெற்றி மணிமகுடம்". இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment