ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 20, 2023

ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை, நவ. 20 -  ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் இலக்கிய அணி தெருமுனைப் பிரச்சாரங்கள் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மேனாள் பிரதமர் இந்திரா காந்தி யின் 106ஆ-வது பிறந்தநாள் விழா சென்னை சத்யமூர்த்தி பவனில் நேற்று (19.11.2023) நடைபெற்றது. 

இதில் கே.எஸ்.அழகிரி பங் கேற்று, இந்திராகாந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத் தினார்.

தொடர்ந்து கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

தொடர்ந்து, இலக்கிய அணி சார்பில் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா கருத்தரங்கம் நடை பெற்றது. அதில் எஸ்சி அணித் தலைவர் ரஞ்சன்குமார் ஏற்பாட் டில், நலிவடைந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு கே.எஸ்.அழ கிரி நிதியுதவிகளை வழங்கினார். 

பின்னர் கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

இலக்கிய அணிகள்தான் ஒரு அரசியல் கட்சியின் தலையாய தூண்கள். கட்சியின் நிலை என் னவோ அதை காங்கிரஸ் இலக்கிய அணி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக் கைகள் குறித்து இலக்கிய அணி தெருமுனை பிரச்சாரங்கள் செய்ய வேண்டும்.

நான் எந்த பின்புலமும் இன்றி, பேச்சாளராகத்தான் கட்சியில் அறிமுகம் ஆனேன். இந்திரா காந்தி தனியாரிடம் இருந்த வங்கி களை தேசியமயமாக்கி புரட்சி செய்தார். அதை மாணவர்கள் மத்தியில் கொண்டு சென்றோம். பேரணி நடத்தினோம். அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதிகாரத்தில் இருப்பதால் பெரியாரை எதிர்த்து பேசுவதா?

மது ஒழிப்பை பற்றி பேசும் முழுத்தகுதியும் காங்கிரசுக்கு உண்டு. கள்ளுக்கு தடை விதித்தபோது, தனக்கு சொந்தமான அனைத்து தென்னை மரங்களையும் வெட்டிச் சாய்த்தவர் பெரியார். ஆனால் சிலர் (அண்ணாமலை) பெரியா ருக்கு எதிராக பேசி வருகிறார்கள். பெரியார் சிலைகளை, பெரியார் கல்வெட்டுகளை அகற்றுவோம், அப்புறப்படுத்துவோம் என்று பேசி வருகிறார்கள்.

அதிகாரத்தில் கட்சி இருப்ப தால், பாதுகாப்பாக பேசுகிறார். அவரைப் போல கோழை அல்ல பெரியார். பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போல அவர் (அண்ணாமலை) பேசலாம். 

அவர்கள் மரபு (பா.ஜனதா) தியாக மரபு அல்ல. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும்வேளையில், நிறைய தெருமுனைப் பிரசாரங் களை நாம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் உ.பலராமன், பொன். கிருஷ்ண மூர்த்தி, ஆ.கோபண்ணா, மக்களவை உறுப்பினர்கள் விஜய் வசந்த், எஸ்சி அணித் தலைவர் ரஞ்சன்குமார், இலக்கிய அணித் தலைவர் பி.எஸ்.புத்தன், துணை தலைவர்கள் ஆலடி சங்கரய்யா, சிங்கை தருமன், பொன் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment