சூதாட்ட செயலியின் உரிமையாளரைக் காப்பாற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 9, 2023

சூதாட்ட செயலியின் உரிமையாளரைக் காப்பாற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சி

சத்தீஷ்கர் முதலமைச்சர் குற்றச்சாட்டு

ராய்ப்பூர், நவ.9 மகாதேவ் சூதாட்ட செயலியின் உரிமை யாளர்களை காப்பாற்ற பாஜக, அமலாக்கத்துறை முயற்சிக்கிறது என சட்டீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் குற்றம் சாட்டினார். துபாயில் வசிக்கும் சத்தீஷ்கரை சேர்ந்த வர்களான சவுரவ் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோர் மகாதேவ் சூதாட்ட செய லியை நடத்தி வருகின்றனர். மகாதேவ் செயலி உரிமை யாளர்களிடம் சத்திஷ்கர் முதலமைச்சர் ரூ.508 கோடி லஞ்சம் பெற்றதாக அமலாக் கத்துறை தெரிவித்தது. மகா தேவ் செயலி உள்பட 22 இயைணயதள சூதாட்ட செயலிகளுக்கு 5.11.2023   அன்று ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. 

இந்நிலையில், முதலமைச் சர் பூபேஷ் பாகேல்  கூறுகை யில்,‘‘ சத்தீஷ்கர் பேரவை தேர்தலில் பாஜ தோல்வியை சந்திக்க உள்ள நிலையில், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை இறக்கியுள்ளனர். 

சூதாட்ட செயலி வழக்கில் கைது செய்யப்பட்ட அசீம் தாஸ் பாஜவுக்கு நெருக்க மானவர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனமும் பாஜ தலைவர் ஒருவருக்கு சொந்தமானது. கடந்த 2 ஆண்டுகளாக இதில் விசா ரணை நடந்து வருகிறது. பிளேஸ்டோரில் இல்லாத ஒரு செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த செயலியை தடை செய்வது அவர்களது நோக்கம் அல்ல. வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற தளங்களை பயன் படுத்தி சூதாட்ட செயலியை நடத்தி வருகின்றனர். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையதள சூதாட்ட செயலிகளுக்கு முழு மையான தடை விதிக்காத வரை இதில் எதுவும் நடக்க போவது இல்லை. இணைய தள சூதாட்டம் நடத்தி வருபவர்கள் லட்சக்கணக்கில் போலி வங்கி கணக்குகளை தொடங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. போலி வங்கிக் கணக்குகளை கண்டுபிடித்து அவற்றை முடக்க வேண்டும். ரவி உப்பல், சவுரப் சந்திரகர் ஆகியோர் மகாதேவ் செயலியின் உரிமை யாளர்கள் என்று சத்தீஷ்கரில் உள்ள சிறு குழந்தை களுக் குக்கூட தெரியும். ஆனால், அவர்களை தங்களுக்கு தெரி யாது என அமலாக்கத் துறை சொல்கிறது.இவர்கள் இரு வரையும் காப்பாற்றுவ தற்கே  பாஜவும், அமலாக்கத் துறை யும் முயற்சிக்கிறது’’ என்றார். 

மகாதேவ் செயலியை தடை விதிக்கக்கோரி கடந்த 2 மாதங்களுக்கு முன் சத்தீஷ்கர் முதலமைச்சர் கடிதம் அனுப் பியும் அதை தடுக்க ஒன்றிய அரசு தவறி விட்டது என காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அதற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் மறுப்பு தெரவித்துள்ளார்.

No comments:

Post a Comment