சோனியா காந்தியின் வாழ்த்துச் செய்தியைச் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 6, 2023

சோனியா காந்தியின் வாழ்த்துச் செய்தியைச் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

 காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க எண்ணியவர்கள் -
பா.ஜ.க. இல்லாத இந்தியாவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!

இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடியது
பெரியார் கொள்கைகள் தான்-சமூகநீதித் தத்துவம் தான்!

மதுரை, நவ.6 காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க எண்ணியவர்கள் - பா.ஜ.க. இல்லாத இந்தியாவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்! இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடியது பெரியார் கொள்கைகள் தான்-சமூகநீதித் தத்துவம் தான் என்று சோனியா காந்தியின் வாழ்த்துச் செய்தியைச் சுட்டிக்காட்டி  தமிழர் தலைவர்  ஆசிரியர் உரையாற்றினார்.

ஒன்றிய அரசின் மனுதர்ம யோஜனாவைக் கண்டித்து நாகப்பட்டினம் (25.10.2023) முதல் மதுரை (5.11.2023) வரை நடைபெற்ற கூட்டங்களின் நிறைவு நாளில் திருப்புவனம், மதுரை பகுதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். 

குலத்தொழிலைத் திணிக்கும் ‘‘விஸ்வகர்மா யோஜ னா”வா? ‘‘மனுதர்மா யோஜனா”வா? என்ற கேள்வியுடன் ஒன்றிய அரசின் சதித்திட்டத்தை தோலுரித்துக் காட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பிரச்சாரப் பெரும் பயணத்தில் நிறைவு நாளான 5.11.2023, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு திருப்புவனம் சந்தைத் திடலிலும், மதுரை ஓபுளா படித்துறையிலும் இரண்டு நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.

திருப்புவனம் சந்தைத் திடலில் முதல் கூட்டம்

தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (திருப்புவனம், 5.11.2023)

திருப்புவனத்தில் முதலில் ‘‘மந்திரமா? தந்திரமா?'' நிகழ்ச் சியை பெரியார் பித்தன், மழைப்பொழிவினூடேயே சிறுவர் களை வைத்து நகைச்சுவை கலந்தும் சிந்திக்க வைக்கக் கூடிய வகையிலும் நடத்தினார். மக்கள் கடையோரங்களில் நின்ற படியே செவிமடுத்துக் கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து, கோவை அன்புமதி ஒன்றிய அரசின் குலக்கல்வித் திட்டத்தை கண்டித்துப் பேசினார். தொடர்ந்து, மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் ஒன்றிய அரசு அறிவித்துள்ள மனுதர்மா யோஜனாவைக் கண்டித்து பேசினார். தூறல் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், தோழர்கள் அதை அலட்சியப்படுத்தி விட்டு பணிகளைத் தொடர்ந்தனர். அதைத் தொடர்ந்து தோழர்களின் எழுச்சிகரமான வாழ்த்தொலிகளுக்கிடையே தமிழர் தலைவர் மேடைக்கு வேக நடையில் வந்துகொண்டிருந்தார். தோழர் களும், மாவட்டத்தில் இருந்த முக்கிய பிரமுகர்களும் அவருக்குப் பின்னே ஓடி வந்தனர்.

நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்டத் தலைவர் இரா.புக ழேந்தி தலைமையேற்க, மாவட்டச் செயலாளர் பெரு.இராசா ராம் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார். சிவகங்கை தலைமைக் கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி, மாவட்டக் காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், காரைக்குடி மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை, சிவகங்கை மாவட்ட துணைத் தலைவர் ஜெ.தனபால், மாவட்ட மகளிரணித் தலைவர் மணிமேகலை சுப்பையா, இராம நாதபுரம் மாவட்டத் தலைவர் எம்.முருகேசன், சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சு.இராசாங்கம், காரைக்குடி மாவட் டக் காப்பாளர் சாமி.திராவிடமணி, காரைக் குடி மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி, மாவட்ட அமைப்பாளர் ச.அனந்த வேல், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கோ.வ.அண்ணா ரவி, பெரமனூர் குமார், நகர செயலாளர் நாகூர்கனி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்கள்

சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர், தலைவர் திருப்புவனம் பால் உற்பத்தியாளர் சங்கம் த.சேங்கை மாறன், மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர், மேனாள் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆ.தமிழரசி ரவிக் குமார் ஆகியோர் பயணம் வெற்றி பெற வாழ்த்திப் பேசினர். 

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குண சேகரன், திருப்புவனம் மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கை மாறன், ம.தி.மு.க. பூமிநாதன், காங்கிரஸ் கட்சி மகேசுவரன், பி.வி.கதிரவன், அக்ரி கணேசன், பசும்பொன் பாண்டியன், கி.ரி.முகைதீன், பேரறிவாளன், பி.என்.அம்மாவாசி, இராம. வைரமுத்து, ம.தி.மு.க. மகபூப்பாட்சா பா.தீபம் (எ) சுடர் மொழி, மா.முருகேசன், கா.சிவகுருநாதன், ஜெ.பாலா, இரா.திருப்பதி, ஆதவன், த.அழகர், தி.செயலெட்சுமி, சி. கிருஷ்ணவேணி, இராமநாதபுரம் மாவட்ட தலைவர் எம்.முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  

தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்து, அன்னை சோனியா காந்திக்கு தான் எழுதிய கடிதத்தைக் குறிப்பிட்டு அதற்கு அவர் எழுதிய பதில் கடிதத்தைச் சுட்டிக்காட்டி, “பெரியார்தான் இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடியவர்! சமூகநீதிக் கொள்கைதான் இந்தியாவை வழிநடத்தப்போகிறது” என்றார். 

சட்டமன்ற மேனாள் தி.மு.க. உறுப்பினர் சோனையா வாழ்த்து அனுப்பியிருந்தார். திருப்பாசேத்தி கழகப் பொறுப்பாளர் அக்னி நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

மதுரை ஓபுளா படித்துறையில் நிறைவு விழா!

தொடர் பரப்புரைப் பயண நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (மதுரை, 5.11.2023)

அதைதொடர்ந்து, பிரச்சார பயணக்குழு மதுரைக்கு வந்தது. பெரியார் பெருந் தொண்டர் கு. துரைராஜ் நினைவரங்கம், தோழர் க.மாரி நினைவு மேடையில், மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம் தலைமையில். மாவட்டச் செயலாளர் சுப.முருகானந்தம் வரவேற்பில், தலைமைக்கழக அமைப்பாளர் வே.செல்வம் அவர்களின் ஒருங்கிணைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

மாவட்டக் காப்பாளர்கள் தே.எடிசன் ராஜா, சே.முனியசாமி, சுப.தனபாலன், பகுத் தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனை வர் வா.நேரு, மாநில சட்டத்துறை செயலாளர் மு.சித்தார்த்தன், துணைச் செயலாளர் நா.கணேசன், த.ம.எரிமலை, ச.பால்ராஜ், லெ.வீரமணி, கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பயண ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பயணத்தில் ஈடுபட்ட தோழர்களுக்கு கருப்பு ஆடையணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி சிறப்பித்தார். பேராசிரியர் அருணன் எழுதிய “சனாதனம் பற்றி சனாதனிகள்” நூல் வெளியிடப்பட்டது. தி.மு.க. உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் பொன்.முத்து ராமலிங்கம், மதுரை நாடாளுமன்ற உறுப் பினர் சு.வெங்கடேசன், மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் பயணம் வெற்றி பெற்றுள்ளது என்று ஆசிரியரை வாழ்த்திப் பேசினர். 

தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை

நிறைவாக ஆசிரியர் உரையாற்றினார். அவர் தனது உரையில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டு, “காங்கிரஸ் இல்லாத இந்தி யாவை உருவாக்க முனைந்தவர்கள் இன்று பா.ஜ.க. இல்லாத இந்தியாவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறி, தனது உரையை நிறைவு செய்தார். 

உசிலம்பட்டி கழக மாவட்டச் செயலாளர் முத்துக்கருப்பன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். 

‘‘ஒன்றிய அரசின் ‘‘மனுதர்ம யோஜானா'' திட்டத்தை எதிர்த்து நாகப்பட்டினம் (25.10.2023) முதல் மதுரை (5.11.2023) வரை தொடர் பரப்புரைப் பயணம் மேற்கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, மதுரை மாவட்டப் பொறுப்பாளர்கள் செல்வம், பழக்கடை முருகானந்தம், சுப.முருகானந்தம், அழகர் ஆகியோர் கருப்பு ஆடை அணிவித்து சிறப்பித்தனர் (மதுரை, 5.11.2023).

நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத்தலைவர் பொ.பவுன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் த. இராக்குத்தங்கம், இளைஞரணித் தலைவர் க.சிவா, மாவட்ட துணைச் செயலாளர் பீ.பீ.குளம் சுரேஷ், இளைஞரணிச் செயலாளர் பேக்கரி கண்ணன், ப.க. தலைவர் ச.சரவணன், ப.க. மாவட்ட அமைப்பாளர் ஓ.ராமச்சந்திரன், ‘விடுதலை' வாசகர் வட்டத் தலைவர் இராஜேசுவரி ராமசாமி உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இயக்க நூல்கள் 

ரூ.1,97,560-க்கு விற்பனை!

இரண்டு பரப்புரைக் கூட்டங்களிலும் ரூ.1,97,560 தொகைக்கு இயக்க நூல்கள் விற்பனையாயின.

பரப்புரைப் பயணத்தில் பங்கேற்றோர்

குலத்தொழிலை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசின் ‘‘மனுதர்ம யோஜனா''வின் சதித் திட்டத்தை எதிர்த்து, தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மேற்கொண்ட பரப்புரைப் பெரும் பயணத் தில் அக்டோபர் 25 நாகப்பட்டினம் முதல் நவம்பர் 5 மதுரை வரை பங்கேற்றோர்:

1. தமிழர் தலைவர் ஆசிரியர் டெம்போ வேன்

1. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்

2. ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்)

3. தி.என்னாரெசு பிராட்லா

4. பா.சிவக்குமார் (ஒளிப்படக் கலைஞர்)

5. சி.தமிழ்ச்செல்வன் (ஓட்டுநர்)

2. ஜீப் - 1 (ஆசிரியருடன்)

1. இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)

2. சு.இனியன்

3. சு.பரணிதரன்

4. கா.இர.நிலவன்

5. அ.க.அருள்மணி (ஓட்டுநர்)

3. ஜீப் -2 (ஆசிரியர் அய்யாவுடன்)

1. இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்)

2. பெரியார் திடல் சோ.சுரேஷ்

3. அ.சுரேஷ் (ஆத்தூர்)

4. ஆ.சாந்தகுமார் (புத்தக விற்பனையாளர்)

5. வி.மகேந்திரன் (ஓட்டுநர்)

4. பேச்சாளர் டெம்போ வேன்

1. முனைவர் துரை. சந்திரசேகரன் (பொதுச்செயலாளர் - முதல் கட்டம்)

2. முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராமப் பிரச்சாரக்குழு மாநில அமைப் பாளர் - இரண்டாம் கட்டம்)

3. உடுமலை வடிவேல் (பெரியார் வலைக்காட்சி)

4. இரா.யுகேஷ் (பெரியார் வலைக்காட்சி)

5. பா.அர்ச்சுனன் (புத்தக விற்பனை யாளர்)

6. க.சுரேந்தர்

7. கே.என்.மகேஷ் (ஓட்டுநர்)



No comments:

Post a Comment