அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேர்தல் ஆணையம் பிஜேபிக்கு ஆதரவாக செயல்படுவதா? உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 17, 2023

அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேர்தல் ஆணையம் பிஜேபிக்கு ஆதரவாக செயல்படுவதா? உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

மும்பை, நவ.17 பாஜகவின ருக்காக தேர்தல் நடைமுறை விதி களை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளதா? என சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

230 சட்டப்பேரவைத் தொகு திகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் இன்று (17.11.2023) ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந் நிலையில், மதத்தை வைத்து வாக்கு சேகரிக்கும் பாஜகவினர் மீது குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாராட்டிர மேனாள் முதலமைச்சரும் சிவசேனை தலைவருமான உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மத்தியப் பிரதேசத் தில் பிரசாரம் மேற்கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘பாஜகவுக்கு வாக்களித் தால் அயோத்தி ராமர் கோயி லுக்கு இலவச பயண சேவை’ என்று கூறி வாக்கு சேகரித்தார். அது போல கருநாடகத் தேர்த லின்போது வாக்கு சேகரித்த பிரதமர் மோடி, ‘நீங்கள் வாக்களிக்கும்போது அனு மன் பெயரைக் கூறுங்கள்’ என்றார்.

இந்நிலையில், பாஜகவின ருக்காக தேர்தல் நடைமுறை விதிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளதா? என்றும் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ‘ராமர் கோயிலுக்கு இலவச பயண சேவை என்றால் ஏன் மத்தியப் பிரதேச மக்களுக்கு மட்டும்? ஒட்டுமொத்த இந்தியா வில் உள்ள மக்களுக்கும் வழங்கலாமே? அமித் ஷாவுக்கு தெரியும் அவர்கள் எதுவுமே செய்யவில்லை என்று. எனவே தான் ராமரை வைத்து வாக்கு கேட்கிறார்கள்’ என்றார். தேர்தல் ஆணையத்தின் இந்த இரட்டை நிலைப்பாடு குறித்து சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் அனில் தேசாய், தேர்தல் ஆணை யத்துக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment