மக்களை மய்யப்படுத்திய ஆட்சி திரும்பவேண்டிய நேரமிது: ராகுல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 14, 2023

மக்களை மய்யப்படுத்திய ஆட்சி திரும்பவேண்டிய நேரமிது: ராகுல்

புதுடில்லி,நவ.14 -  ‘நாடு முழுவதும் மக்களை மய்யப்படுத்திய ஆட்சி நிர்வாகத்தின் சகாப்தம் திரும்ப வேண்டிய நேரமிது’ என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கூறினார்.

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் அண்மையில் ஈடுபட்ட ராகுல் காந்தி, மாநிலத்தில் கடன் தொல்லை கார ணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயி கும்மாரி சந்திர யாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த குடும்பத்தினருடனான சந்திப்பு குறித்து தனது சமூக வலை தள பக்கத்தில் அந்த காணொலியுடன் சனிக்கிழமை வெ யிட்ட பதிவில் ராகுல் கூறியிருப்பதாவது:

சமூகத்தில் பின்தங்கிய கடைசி நிலையில் இருப்பவரின் குரல்தான் முக்கியமானது என்று காந்தியார் குறிப்பிட்டிருக்கிறார். அப்படிப் பட்ட குரல்தான் விவசாயி கும்மாரி சந்திரயாவுடையது. அவரைக் காப்பாற்ற முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமை யிலான  பிஆர்எஸ் அரசு தவறிவிட்டது.

கடன் சுமை காரணமாக அந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு உரிய நேரத்தில் அரசு ஆதரவு அளித்தி ருந்தால், அவர் இன்றைக்கு உயிருடன் இருந் திருப்பார். அந்த வகையில், தெலங்கானா மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பிஆர்எஸ் மற்றும் பாஜக கட்சிகள் திறனற்றவை.

காங்கிரஸ் அரசு மாற்றத்தை ஏற்படுத் துமா? என்றால், நிச்சயம் ஏற்படுத்தும். சமூக த்தில் இது போன்று பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக் காக பல்வேறு வாக் குறுதிகளை காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளி யிட்டுள்ளது.

தெலங்கானா மக்கள் வாழ குறைந்தபட்ச நிலம் வழங்குவதற் கான திட்டத்தை நடைமுறைப் படுத்த காங் கிரஸ் உத்தரவாதம் அளித்துள்ளது. விவசாயிகளின் கடன் சுமை நிலையிலும் விரை வில் மாற்றம் வரும்.

மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந் தால், மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை, பேருந்துகளில் கட்டணமில்லா பய ணத் திட்டம், ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம், ஏழை விவசாயி களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 உதவித் தொகை, வேளாண் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 உதவித் தொகை வழங் குதல் உள்ளிட்ட திட்டங்கள் நிறை வேற்றப் படும்.

நமது மக்கள் அனைவருக்கும் நீதி, நியா யம் கிடைப்பதை உறுதிப் படுத்துவதற்கான போராட்டத்தை காங்கிரஸ் இப்போது மேற் கொண்டு வருகிறது. அந்த வகை யில், நாடு முழுவதும் மக்களை மய்யப்படுத்திய ஆட்சி நிர்வாகத் தின் சகாப்தம் திரும்பவேண்டிய நேரமிது என்றார் அவர்.

No comments:

Post a Comment