ரூ.77.03 கோடியில் குடிநீர் வழங்கும் பணி! ரூ.418.20 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம்! அமைச்சர் கே.என்.நேரு திட்டப்பணியை தொடங்கி வைத்தார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 7, 2023

ரூ.77.03 கோடியில் குடிநீர் வழங்கும் பணி! ரூ.418.20 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம்! அமைச்சர் கே.என்.நேரு திட்டப்பணியை தொடங்கி வைத்தார்!

சென்னை, நவ.7- ரூ.418.20 கோடி மதிப்பீட்டில் கொட்டிவாக்கம், பால வாக்கம், நீலாங்கரை பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம் மற்றும் ரூ.77.03 கோடி மதிப்பீட்டில் நீலாங் கரை பகுதிக்கான குடிநீர் வழங்கல் திட்டப் பணிகளுக்கு நகராட்சி நிரு வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று (06.11.2023) நீலாங்கரையில் அடிக்கல் நாட்டினார்.

  இந்நிகழ்விற்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித் தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசிய தாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட் பட்ட வார்டு-181, கொட்டிவாக்கம், வார்டு-182, பாலவாக்கம் மற்றும் வார்டு-192, நீலாங்கரை பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டப் பணி களுக்கு இன்று அடிக்கல் நாட்டப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கொட்டிவாக்கம், பாலவாக்கம் மற்றும்  நீலாங்கரை ஆகிய பகுதிகளில் உள்ள 12,776 குடியிருப்புகளுக்கு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும். இதன் மூலம், 1 இலட்சத்து 3 ஆயிரத்து 971 பொதுமக்கள் பயன் பெறுவர். இத் திட்டத்தின் கீழ், 17 கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு 139.54 கி.மீ நீளத்திற்கு பிரதான குழாய்கள் பதிக்கப்படும். மேலும், 24.66 கி.மீ நீளத் திற்கு உந்து குழாய்கள் பதிக்கப்பட்டு, 1,633 இயந்திர துளைகள் அமைக்கப் படும்.

குடிநீர் வழங்கல்

மேலும், நீலாங்கரை பகுதிக்கான குடிநீர் வழங்கல் திட்டப் பணிகளின் மூலம் அப்பகுதியில் உள்ள 4,986 குடி யிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவதன் மூலம் 42 ஆயிரத்து 206 பொதுமக்கள் பயன் பெறுவர். இத்திட்டத்தின் கீழ் 51.651 கி.மீ நீளத்திற்கு குடிநீர் பகிர்மான குழாய்கள் பதிக்கப்படும். மேலும், 525 மீட்டர் நீளத்திற்கு உந்து குழாய்கள் பதிக்கப்பட்டு 22 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், 5 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் அமைக்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.398 கோடி மதிப்பீட்டில், மணலி, திருவொற்றியூர், மாதவரம், வளசர வாக்கம், பெருங்குடி மற்றும் சோழிங்க நல்லூர் மண்டலங்களைச் சார்ந்த பகுதிகள் பயன் பெறும் வகையிலான குடிநீர் திட்டப் பணிகளை தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம், 76 ஆயி ரத்து 749 பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். மேலும், பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.698.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக் கடை திட்டப் பணிகள்/கழிவுநீர் கட் டமைப்புகள் மேம்படுத்தும் பணிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு பயன்பாட் டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 2 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.

தற்பொழுது ரூ.5,239.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு குடிநீர் திட்டப் பணிகள் (150 எம்.எல்.டி மற்றும் 400 எம்.எல்.டி உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் உள்பட) மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் 36.57 இலட்சம் மக்கள் பயன் பெறுவார்கள். மேலும், ரூ.799.32 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங் களின் கீழ் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்/கழிவுநீர் கட்டமைப்பு மேம் பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் நிறைவுற்ற பின்னர் 7 இலட்சம் மக்கள் பயன் பெறுவார்கள்.

பெருநகர சென்னை மாநகராட் சிக்குட்பட்ட பகுதிகளுக்கு நாளொன் றுக்கு 1000 எம்.எல்.டி வீதம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

 மேலும், நாளொன்றுக்கு 960 எம்.எல்.டி. கழிவுநீரை சுத்திகரிக்கும் 16 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் மேற் கொள்வதற்கான உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 650 எம்.எல்.டி கழிவுநீர் தினந்தோறும் சுத்திகரிக்கப்பட்டு தொழிற்சாலை களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், நெம்மேலியில் ரூ.1516 கோடியே 82 இலட்சம் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற் றுள்ளது. விரைவில் தமிழ்நாடு முதல மைச்சர் அவர்களால் திறந்துவைக்கப் பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். 

இந்நிலையத்திலிருந்து பெறப்படும் குடிநீர் மூலம் வேளச்சேரி, உள்ளகரம்-புழுதிவாக்கம் மற்றும் சோழிங்க நல்லூர் உள்ளிட்ட 12 பகுதிகளில் உள்ள 9 இலட்சம் மக்கள் பயனடை வார்கள்.

மேலும், இன்று அடிக்கல் நாட்டப் பட்டுள்ள அனைத்து பணிகளும், நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்கப்பெற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களின் வழிகாட்டுதலின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வசதி, சாலைகள் மேம்பாடு, மழைநீர் வடிகால் பணிகள் போன்ற பல்வேறு பணிகள் எவ்வித தொய்வுமின்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு வடிநிலப் பகுதிகளை மேம்படுத்துவ தற்காக பெருநகர சென்னை மாநக ராட்சி, நகராட்சி நிர்வாக இயக்கு நரகம், நீர்வளத்துறை ஆகியவற்றின் மூலம் மேற்கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் சுமார் 4 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய் துள்ளார்கள்.

பெருநகர சென்னை மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 876 கி.மீ தூரத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2,000 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் போடப்பட்டுள்ளன. மேலும், 3000-க்கும் மேற்பட்ட சாலைப்பணிகள் விரைவில் முடிக்கப்பட உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தென் சென்னை நாடா ளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்க நல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், செயல் இயக்குநர் செ.சரவணன், சோழிங்கநல்லூர் மண் டலக் குழுத்தலைவர் வி.இ.மதியழகன், பெருங்குடி மண்டலக் குழுத்தலைவர் எஸ்.வி.இரவிச்சந்திரன், நிலைக்குழு தலைவர் (கல்வி, பூங்கா (ம) விளை யாட்டுத் திடல் த.விஸ்வநாதன், மாமன்ற உறுப்பினர் மரு.தமிழரசி சோமு, சென்னை குடிநீர் வாரிய பொறியியல் இயக்குநர் எம்.ஜெய்கர் ஜேசுதாஸ், தலைமைப் பொறியாளர் ஆர்.கண்ணன் மற்றும் உயர் அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment