தமிழ்நாடு முழுவதும் ஆயத்த நிலையில் 4,967 நிவாரண முகாம்கள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 14, 2023

தமிழ்நாடு முழுவதும் ஆயத்த நிலையில் 4,967 நிவாரண முகாம்கள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை,நவ.14 - மழை பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கண்காணித்து வருகிறார் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடர் பான நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை அமைச் சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் 35 மாவட்டங்களில் நேற்று மழை பதிவாகியுள்ளது. நீர் நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருகின்றன. மழைப்பொழிவு அதிகம் உள்ள மாவட்டங்களில் வழி காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் வடகிழக்கு பருவ மழை 13 செ.மீ பதிவாகி உள்ளது.

மழை பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கண் காணித்து வருகிறார். மழை பாதிப் புகளை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. கனமழையால் ஏற்படும் எந்தவிதமான சூழ்நிலை களையும் சமாளிக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

கடலோர மாவட்டங்களில் 121 இடங்களில் நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன. 400 பேர் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 4,967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து துறைகளும் மழைக்கான முன்னெச்சரிக்கை நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளன. மழை யால் இதுவரை பெரிதாக பாதிப்பில்லை.

பருவமழையால் உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தப் பின்னரே, அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஆட்சியர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. அணை நிலவ ரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின் றன. வானிலை மையத்துடன் இணைந்து, அதற்கேற்றவாறு மழை தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment