புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாட்டின் 3 ஆவது பல் மருத்துவக் கல்லூரி முதலமைச்சர் திறந்துவைக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 12, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாட்டின் 3 ஆவது பல் மருத்துவக் கல்லூரி முதலமைச்சர் திறந்துவைக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, நவ.12- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழி காட்டுதலின்படி, 3 ஆவது வாரமாக மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது, நலவாழ்வு மய்யங்கள், நகர்புற சமுதாய சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் விரைவில் திறந்து வைக்கப்படும்,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 15.11.2023 அன்று புதுக் கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாட்டின் 3 ஆவது பல் மருத்துவக் கல்லூரியை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (11.11.2023) சென்னை, அண்ணா நகர் மண்டலம், ஷெனாய் நகர், புல்லா அவென்யூ, கஜலட்சுமி காலனியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வடகிழக்கு பருவமழையின்போதும், மழைக்கால நோய்களான டெங்கு, இன்புளுயன்சா, டைபாய்டு காய்ச்சல், டையோரியா, சேற்றுப்புண் போன்ற பல்வேறு பாதிப்புகளில் இருந்தும், நோய்களில் 

இருந்தும், பொதுமக்களை காக் கும் பொருட்டு பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை வாரந்தோறும் மருத்துவ முகாம் கள் நடத்தப்படுகிறது. 29.10.2023 அன்று 1000 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்த இலக்கு நிர் ணயிக்கப்பட்டு 1943 முகாம்கள் நடத்தப்பட்டது. மேலும், 2வது வாரமாக 04.11.2023 அன்று 1000 முகாம்கள் நடத்த இலக்கு நிர் ணயிக்கப்பட்டு 2,263 முகாம் கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து 3 வது வாரமாக 1000த்துக்கும் மேற்பட்ட இடங்களில் மழைக் கால சிறப்பு மருத்துவ முகாம் கள்  இன்று நடைபெறுகிறது. மேலும், நவம்பர் மாதத்தில் 18.11.2023 (சனிக்கிழமை), 25.11.2023 (சனிக்கிழமை) ஆகிய தினங்களிலும், டிசம்பர் மாதத் தில், 02.12.2023 (சனிக்கிழமை), 09.12.2023 (சனிக்கிழமை), 16.12.2023 (சனிக் கிழமை), 23.12.2023 (சனிக்கிழமை), 30.12.2023 (சனிக்கிழமை) ஆகிய நாள்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது. இம் முகாம்களில் 476 நடமாடும் மருத்துவக் குழுக் கள் மற்றும் 805 பள்ளி சிறார்களுக்கான மருத்துவ குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

15.11.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் நாட்டின் 3 ஆவது பல் மருத்துவக் கல்லூரியை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கவுள் ளார்கள். தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 இடங்களில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங் களும் திறந்து வைக்கப்படவுள்ளது. நான் 14.11.2023 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் 13 மருத்துவ கட்டடங்களை நேரில் சென்று திறந்து வைக்க வுள்ளேன். மக்கள் நல்வாழ்வுத் துறையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ கட்டடப் பணிகள் நடை பெற்று வருகிறது. வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் 1000-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் அமைக்கும் பணிகளும் நடை பெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment