‘கண்டதும்...! கேட்டதும்....!’ (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 2, 2023

‘கண்டதும்...! கேட்டதும்....!’ (2)

பதவி நாடா தலைவர்! நன்றி எதிர்பாரா தலைவர்! 
தமிழ் மக்களின் நலனுக்காகவே வாழும், தமிழர் தலைவர்!

விஸ்வகர்மா யோஜனா என்ற மனுதர்ம யோஜனாவை எதிர்த்து கடந்த 25.10.2023  அன்று நாகப்பட்டினத்தில் தொடங்கி 5.11.2023 அன்று மதுரையில் முடியும், பிரச்சாரப் பெரும் பயணம் நிறைவு பெறும் தருவாயில் இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தோழர்கள் ஆசிரியரை மகிழ்விப்பதற்காக சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அனைவரும் பாராட்டுக்குரியவர்களே! அதை ஆசிரியரும் பாராட்டிப் பேசி வரு கிறார். அடுத்தடுத்த கட்டங்களில் தான் இதனுள் ஒரு சூட்சுமம் இருப்பது மெல்ல புரியத் தொடங்கியது. அதாவது, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அடுத்தடுத்து கூட்டங்களின் ஏற்பாடுகள் எந்த அளவில் உள்ளன என்பதை கைப்பேசியில் விசா ரிக்கும் போது, “நம்பியூரில் சென்னியப்பன் அசத்திட்டாரு போங்க. கொடிகள் கட்டி இருப்பதென்ன! ஆசிரியரை கோபிசெட்டி பாளையத்திலிருந்து நம்பியூர் வரை மேள தாளத்துடன் ஒரு ஊர்வலம் போலவே அழைத்து வந்ததென்ன! என்று அடுத்த மாவட்டத்துக்காரர்களிடம் பக்கத்து மாவட் டத் தோழர்களின் ஈடுபாட்டைப் பற்றி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களோ, நாங்க மட்டும் என்ன சும்மாவா? என்று அதை போட்டியாக எடுத்துக் கொண்டு இன்னும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து ஆசிரியரிடம் தாங்களும் பாராட்டு களைப் பெற வேண்டும் என்கிற வேகத்துடன் மேலும் மேலும் அசத்தி வருகின்றனர்.  அப்படித்தான், நேற்று (1.11.1023) தாராபுரம் மாவட்டம் பெதப்பம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்ட ஏற்பாடுகளைக் காணும் போது இந்த கொள்கைப் போட்டி உள்ளங்கை நெல்லிக்கனி போல் பளிச்சென்றே புரிந்து விட்டது. குடிமங்கலத்தில் ஆசிரியருக்கு வர வேற்பளிக்க நான்குவழிச் சாலையோரங் களிலும், ரவுண்டானாவைச் சுற்றி வரிசை யாகவும், நெருக்கமாகவும் கொடிகளைக் கட்டி, காண்போரின் பார்வையை பறித்துக் கொண்டனர். அதுமட்டுமா? மாலை 5 மணிக்கே பெதப்பம்பட்டி கூட்ட திடலில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் மக்கள் முழுமையாக அமர்ந்திருந்தனர். மேலும் நாற்காலிகள் போடுவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன. மேடையில் நிமிர்வு கலைக்குழுவினரின் பறையிசை பார்வை யாளர்களின் முதுகை நிமிர்த்திக்கொண் டிருந்தது. கூட்டத்தில் ஆண்களுக்கு நிகராக மகளிரும் அமர்ந்திருந்ததைக் காணும் போதே, சரி இன்றைக்கு ஆசிரியர் ஒரு 10 நிமிடம் இதைப்பற்றித்தான் பேசப்போகிறார்’ என்று யூகிக்கவும் படியாக இருந்தது. ஆசிரியர் வருகைக்காக பேண்டு வாத்தியங் களுடன் தோழர்கள் காத்துக்கொண்டிருந் தனர். அங்கிருந்த மக்கள் ஆசிரியரைக் காண மிகுந்த ஆவலுடன் பரபரத்துக் காணப்பட்டனர். அதிரடி அன்பழகன் மேடையை அதிர விட்டுக் கொண்டிருந்தார். சரியாக 6.20 மணிக்கு ஆசிரியர் வந்துவிட்டார் என்பதை சரவெடிகளும் வானவேடிக்கை வெடிகளும் கட்டியம் கூறின. 

வானம் கருப்பு வண்ணத்தை ஆடையாக அணிந்து கொண்டிருந்த சூழலில் நடைபெற்ற அந்த வான வேடிக்கையிலும்தான் எத்தனை யெத்தனை வகை? ஒற்றை வெடிச்சிதறல், இரட்டை வெடிச்சிதறல், பல்முனை வெடிச் சிதறல் என்று வானத்திலிருந்து வண்ண வண்ண மத்தாப்புகள் சொரிந்து, ஆசிரியரை வாருங்கள்! வாருங்கள்! என்று மத்தாப்பு மலர்களைத் தூவி வரவேற்பது போல, காண்போரின் உள்ளத்தை கிளர்ச்சிக்காளாக்கி விட்டது. அதுமட்டுமா? அங்கிருக்கும் மக்கள் ஆசிரியரை பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்பதை அவர்களின் பரபரப்படிப் பார்த்தாலே புரிந்துவிட்டது. போட்டி போட்டுக்கொண்டு அவரைக் காணவும், அவருக்கு ஆடையணிவிக்கவும் முந்தி வர முயல, தோழர்கள் சற்று சங்கடப்பட்டு தான் போயினர். மேடையில் அமரும் நாற்காலிகளைக் கூட பார்த்துப் பார்த்துதான் செய்திருந்தனர். கொடிகளும் கூட தி.மு.க., தி.க. கொடிகள் அடுத்தடுத்து கட்டுவதுதான் இதுவரை இருந்த வழமை. இங்கோ ஒரே கொடிக் கம்பியில், மேலே தி.மு.க., கீழே தி.க. என்று இரண்டு கொடிகள் வீதம் வித்தியாசமாக கட்டியிருந்தனர். அண்ணா இரட்டைக்குழல் துப்பாக்கி என்றார்! கலைஞர் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் என்றார்! இன்றைய முதல மைச்சரோ உயிரும் உணர்வும் போல என்றார் ஒரு படி மேலே போய்! அந்தக் கொடிகள் கட்டியிருந்தது இன்றைய முதல மைச்சர் சொன்னதைத்தான் நினைவூட்டின. இப்படித்தான் சிந்தித்து கட்டினார்களா என்பதை யாமறியோம்! அதை அவரையன்றி வேறு யாரறிவார்? ஆக, சேனைத்தலைவர் பாராட்டுவார் என்று கருஞ்சட்டை வீரர் களும் உற்சாகமாக ஏற்பாடுகளைச் செய் கின்றனர்.  அந்த உற்சாகம் தலைவரையும் தொற்றிக்கொள்கிறது. அதனால் பயன் பெறப்போவது யார்? மக்கள்தான்! அந்த மக்களின் வாரிசுகளின் எதிர்காலம்தான்! அமையப்போகும் முற்போக்கு சமுதாயம் தான்! அந்தப்பயன் 2024 ஆம் ஆண்டி லிருந்து தொடங்கட்டும்! பா.ஜ.க. அரசு அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படுவது அதற்கு அச்சாரமாக இருக்கட்டும்!. ஆசி ரியரே சொல்வது போல், மக்கள் அதிகாரமே அதைச் சாதித்ததாக இருக்கட்டும்!  அந்த முடிவை எட்டுவதற்கு திராவிடர் கழகத்தின் பங்கென்ன? அதற்குத்தான் இந்த 91 ஆம் வயதிலும் ஊரூராக, சுற்றுச் சுழன்று, தனது ரத, கஜ, துரக, பதாதிகளைக் கொண்டு இந்தப் பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறார், பதவி நாடா தலைவர்! நன்றி எதிர்பாரா தலைவர்! தமிழ் மக்களின் நலனுக்காகவே வாழும், தமிழர் தலைவர்!

- உடுமலை வடிவேல்


No comments:

Post a Comment