கியூபா மீதான பொருளாதாரத் தடையை நீக்க 187 நாடுகள் ஆதரவு அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்ப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 5, 2023

கியூபா மீதான பொருளாதாரத் தடையை நீக்க 187 நாடுகள் ஆதரவு அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்ப்பு!

நியூயார்க், நவ.5- கியூபா மீதான அமெரிக் காவின் சட்டவிரோத பொருளாதார தடைகளை நீக்க அய்.நா. பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு 187 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல்   ஆகிய நாடுகள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உக் ரைன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வில்லை.

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள சட்டவிரோத பொருளாதாரத்  தடைகளை நீக்குவதற்கு அய்.நா. பொதுச்சபையில் தீர்மானம் கொண்டு வரும்போதெல்லாம் அதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத் தாலும் அமெரிக்கா அதை நிராகரித்து விட்டு சட்ட விரோத பொருளாதாரத் தடைகளை தொடரும். 

தற்போது 31 ஆவது ஆண்டாக அய்.நா. பொதுச் சபையில் கியூபா மீதான 60 ஆண்டுகால கொடூரமான மற்றும் சட்டவிரோத தடைகளை முடிவுக்குக் கொண்டு வர, கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை  187 நாடுகள் ஆதரவாக வாக்களித்த நிலையில்   இஸ்ரேலும் தீர் மானத்திற்கு எதிராக வாக்களித்தன. உக் ரைன்  வாக்களிப்பில் கலந்து கொள்ள வில்லை.  

பொருளாதாரத் தடை மூலம்  உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் பற்றாக்குறையை உரு வாக்கி கியூபா மக்களுக்கு  பெரும்  நெருக் கடியை அமெரிக்கா ஏற்படுத்தி வருவதை பன்னாட்டு நாடுகளின் பிரதிநிதிகள் கண்டித்தனர். 

இத்தகைய “பொருளாதாரத் தாக்கம் கியூபா மக்க ளுக்கு மேலும்  அதிக  தீங்கு விளைவிக்கும்” என்று அய்நாவிற்கான காபோனின் தூதர் ஆரேலி ஃப்ளோர் கும்பா பாம்போ கூறினார். மேலும் இந்த  முற்றுகை “தெளிவாக பிராந்தியத்திற்கும் கண்டங்களின்  ஒற்றுமைக்கும் விரோத மான செயல்” என்றும்  அவர் தெரிவித்தார்.

தீர்மானத்தின்  வெற்றி யை அறிவித்த கியூபா வெளியுறவுத் துறை அமைச்சர்  புருனோ ரோட்ரிக்ஸ், “சட்ட விரோத, தவறான மற்றும் தார்மீக ரீதியாக நீடிக்க முடியாத கொள்கையின் காரணமாக அமெரிக்கா முழுவதுமாக  தனிமைப்படுத் தப்படுவதை உறுதிப்படுத்துகிறது” என்றும்  தெரிவித்தார்.

No comments:

Post a Comment