மேலும் மேலும் மக்களுக்கு இடி பதிவு அஞ்சல்களுக்கு 18 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரி விதிப்பாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 3, 2023

மேலும் மேலும் மக்களுக்கு இடி பதிவு அஞ்சல்களுக்கு 18 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரி விதிப்பாம்

சென்னை, நவ. 3 - இந்திய அஞ்சல் துறையின் பதிவு அஞ்சல் சேவை கட்டணத் துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு 1.11.2023 அன்று முதல் அமலுக்கு வந்தது.

இந்திய அஞ்சல் துறை 1856-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் அனைத்துக் குக் கிராமங்களிலும் அஞ்சல் துறை சேவையை வழங்கி வருகிறது. பதிவு அஞ்சல், துரித அஞ்சல் உள்ளிட்ட பல்வேறு அஞ்சல் சேவை களை வழங்கி வருகிறது. இந்த சேவைகளுக்கு சேரும் இடம் மற்றும் எடை கணக் கிட்டு கட்டணம் நிர்ணயிக் கப்பட்டு வசூலிக்கப்படு கிறது. மேலும், அரசின் அறிவிப்புகளின் அடிப்படையில் அவ்வப்போது வரிகள் விதிக் கப்படுகின்றன. அதன்படி, தற்போது பதிவுஅஞ்சல் சேவைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு 1.11.2023 முதல் அமலுக்கு வந்துள்ளது. பதிவு அஞ்சல் களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து நிர்ணயிக் கப்பட்டுள்ள கட்டணத்தின் படி,

* பதிவு செய்யப்பட்ட புக் பாக்கெட் ஒரு கிலோ ரூ.92.04

* புத்தக அஞ்சல் ஒரு கிலோ ரூ. 36.01

* பதிவு செய்யப்பட்ட கடிதங்கள் ஒரு கிலோ ரூ.315.06

* பதிவு செய்யப்பட்ட பார்சல்கள் ஒரு கிலோ ரூ. 61.36

* பதிவு செய்யப்பட்ட அச்சிட்ட புத்தகங்கள் ஒரு கிலோ ரூ.31.86

* பதிவு செய்யப்பட்ட கால இதழ் ஒரு கிலோ ரூ.54.28

* பதிவு செய்யப்பட்ட பேட்டர்ன் மற்றும் மாதிரி பாக்கெட் ஒரு கிலோ ரூ. 92.04

* பதிவு செய்யப்பட்ட நாளிதழ்கள் ஒரு கிலோ ரூ.22.78

No comments:

Post a Comment