வரிப் பகிர்வு நிதி உத்தரப்பிரதேசத்திற்கு ரூ. 13 ஆயிரம் கோடி: தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ. 2,976 கோடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 10, 2023

வரிப் பகிர்வு நிதி உத்தரப்பிரதேசத்திற்கு ரூ. 13 ஆயிரம் கோடி: தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ. 2,976 கோடி

புதுடில்லி, நவ. 10- அனைத்து மாநிலங்களுக்கும், நவம்பர் மாதத்திற்கான வரிப்பகிர்வு நிதியாக மொத்தம் ரூ. 72 ஆயிரத்து 961 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. இதில், தமிழ்நாடு அர சுக்கு ரூ. 2 ஆயிரத்து 976 கோடியே 10 லட்சத்தை யும், அதிகபட்சமாக உத் தரப் பிரதேச மாநிலத் திற்கு 13 ஆயிரத்து 088 கோடியே 51 லட்சத்தை யும் ஒன்றிய அரசு விடு வித்துள்ளது. 

விழாக் காலத்தை ஒட்டி 3 நாட்களுக்கு முன்பாகவே வரி பகிர்வு நிதி யானது அனைத்து மாநிலங்களுக்கும் விடு விக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாலும், இந்த வரிப் பகிர்வு தமிழ்நாடு அரசுக் கான வஞ்சனையாக பார்க்கப்படுகிறது. 

மேலும், பாஜக செல் வாக்காக இருக்கும் பீகா ருக்கு 7 ஆயிரத்து 338 கோடி ரூபாயையும், மத் தியப் பிரதேசத்திற்கு 5 ஆயிரத்து 727 கோடி ரூபாயையும் விடுவித்துள் ளது. 

இதுதொடர்பாக டிவிட்டர் எக்ஸ் பக்கத் தில் கருத்துப் பதிவிட்டி ருக்கும் மக்களவை உறுப் பினர் சு.வெங்கடேசன் “மாநிலங்களுக்கான வரி பங்கீட்டில் 5 தென்னிந் திய மாநிலங் களுக்கும் சேர்த்து 11,527.86 கோடி விடுவித்துள்ள ஒன்றிய அரசு, உத்தரப்பிரதேசத் திற்கு மட்டும் 13,088.51 கோடி விடுவித்துள்ளது ஏன்? இந்த விகிதாச்சார வேறுபாட்டுக்கு ஒன்றிய அரசு விளக்கம் அளிக் குமா?” என கேள்வி எழுப் பியுள்ளார்.

No comments:

Post a Comment