அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக மன நல நாள், பன்னாட்டு பெண்குழந்தைகள் நாள், வெண்புள்ளி உறுதிமொழி என முப்பெரும் விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 15, 2023

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக மன நல நாள், பன்னாட்டு பெண்குழந்தைகள் நாள், வெண்புள்ளி உறுதிமொழி என முப்பெரும் விழா!

கந்தர்வகோட்டை அக் 15- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை ஒன்றியம் அக்கச்சிப் பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக மனநல நாள், பன்னாட்டு பெண்குழந்தைகள் நாள், வெண் புள்ளிகள் உறுதி மொழி என முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் தலைமை ஆசி ரியர் தமிழ்செல்வி அனைவ ரையும் வரவேற்றார்.

கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை உலக மன நல நாள் குறித்து பேசியதாவது:

உலக மனநல நாளின் ஒட்டுமொத்த நோக்கமானது, உலகெங்கிலும் உள்ள மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்துவதும், மனநலத்திற்கு ஆதரவாக முயற்சிகளைத் திரட்டுவதும் ஆகும்.

இந்த ஆண்டுக்கான உலக மனநல நாள் கருபொருளாக, "மனநலம் என்பது உலகளாவிய மனித உரிமை" என அமைந் துள்ளது. இதன் மூலம் மனநல ஆரோக்கியத்தை மனித உரிமை யுடன் ஒப்பீட்டு கருபொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு பெண்கள் குழந்தைகள் நாள் குறித்து இல்லம் தேடி கல்வி மய்ய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பேசியதாவது:

பெண் குழந்தைகளை மேம் படுத்துதல் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஆண்டு தோறும் அக்டோபர் 11ஆம் தேதி பன்னாட்டு பெண் குழந்தைகள் நாள் கொண்டா டப்படுகிறது.

பெண்குழந்தைகளின் சாதனைகளைக் கொண்டா டவும், அவர்களின் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை மீண்டும் உறுதிப்படுத்தவும் இந்த நாளை கடைப்பிடிக்கிறோம் என்று பேசி னார்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சிந்தியா,  நிவின்,  வெள்ளைச்சாமி, தனலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment