பெண் அமைச்சருக்கு ஜாதியக் கொடுமை: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் என்ன பதில் கூறப்போகிறார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 11, 2023

பெண் அமைச்சருக்கு ஜாதியக் கொடுமை: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் என்ன பதில் கூறப்போகிறார்?

புதுச்சேரி, அக்.11 புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் முதல மைச்சர் ரங்கசாமி உள்பட 4  அமைச்சர்கள் உள்ளனர். அக்கட்சியின் காரைக்கால் நெடுங் காடு தொகுதியைச் சேர்ந்த சந்திர பிரியங்கா போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந் தார். சந்திர பிரியங்காவிடம் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலம், வீட்டுவசதி, தொழி லாளர் நலன், வேலை வாய்ப்பு, கலைப்பண்பாடு, பொருளா தாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் இருந்தன. தற்போது அமைச்சர் சந்திர பிரியங்கா திடீரென்று தனது பதவியிலிருந்து விலகினார். அமைச்சர் சந்திர பிரியங்கா தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவர் அவர் பதவி ஏற்றது முதலே அவர்மீதான ஜாதிய ரீதியிலான விமர்சனங்கள் எழுந்தது. அவரது துறை சார்ந்த அதிகாரிகள் கூட ஜாதி ரீதியில் செயல்படுவதாக வேதனையோடு பல இடங்களில் மறைமுகமாக தெரிவித்திருந்த நிலையில் அவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஓடத் தொடங்கிய வந்தே பாரத் ரயிலில் எந்தஒரு பயணத் திட்டமும் இல்லாமல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ரயிலில்பயணம் செய்து அரசியல் விமர்சனம் செய்கிறார். அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள மாநிலத்தில்தான் ஒரு பெண் அமைச்சர் தன் மீது ஜாதியக் கொடுமை நடந்துள்ளதாக மறைமுகமாகவும் நேரடியாகவும் கூறியுள்ளார். தற்போது பதவி துறந்துள்ளார். இது குறித்து எதுவும் பேசுவாரா? தமிழ்நாட்டில் நடந்தால் மட்டும்தான் கருத்து தெரிவிப்பாரா என்று தெரியவில்லை?


No comments:

Post a Comment