அதானி குழும ஊழல் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரித்தால் உண்மை வெளிவரும்! : காங்கிரஸ் வலியுறுத்தல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 22, 2023

அதானி குழும ஊழல் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரித்தால் உண்மை வெளிவரும்! : காங்கிரஸ் வலியுறுத்தல்!

புதுடில்லி, அக். 22 - அதானி நிறுவனத்தின் ஊழல்குறித்து நாடாளு மன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்தினால் மட் டுமே அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும் என்று காங்கிரஸ் வலியுறுத் தியுள்ளது. 

இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், பங்குச்சந்தைகளில் முறை கேட்டில் ஈடுபட்டு பங் குகள் விலையை உயர்த்தியதாக அமெரிக் காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் அமைப்பு கடந்த பிப்ரவரி மாதம் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது. 

இதேபோல், வெளிநாட்டு நிறு வனம் மூலம் அதானி பங்கு களை மறைமுக முதலீட்டாளர் கள் வாங்கி விற்ற 2 நிகழ்வுகளை ‘ஓ.சி.சி. ஆர்.பி.’ என்றஅமைப்பு கடந்த ஆகஸ்ட்மாதம் அம்பலப் படுத்தியது. 

இந்த நிலையில், இந்தோ னேசியாவில் இருந்து இந்தி யாவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் அதானி நிறுவனம் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளதாகவும், நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனம் செய்த மெகா ஊழலே, இந்தியாவில் மின் கட்டணம் உயரக் காரணம் என்றும் இங்கிலாந்தின் முன்னணி பத்திரிகையான “பைனான் சியல் டைம்ஸ்” ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளது. 

அதானி நிறுவனத்தின் ஊழல்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், அதானி பங்குச் சந்தை மோசடி குறித்த புகாரில் ஓ.சி.சி.ஆர்.பி. அமைப் பிடம் ஆவ ணங்களை கேட்டு செபி அமைப்பு கடிதம் எழுதியுள்ளதை சுட்டிக் காட்டி யுள்ளார். பங்குச்சந்தை மோசடி யில் செபி அமைப்பு இனியும் காலதாமதமின்றி விசா ரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.அதானி நிறுவனத்தின் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தினால் மட் டுமே அனைத்து உண்மைகளும் வெளிச் சத்திற்கு வரும் என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment