‘துஷ்டதேவதை' துர்க்கை கட்சி மாறியது எப்படி? - கருஞ்சட்டை - - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 29, 2023

‘துஷ்டதேவதை' துர்க்கை கட்சி மாறியது எப்படி? - கருஞ்சட்டை -

மேற்கு வங்க மாநிலத்தில் நவராத்திரி என்ற விழாவின் போது துர்க்கை சிலைகளை பெரிய அளவில் செய்து 9 நாள்களுக்குப் பிறகு கடலில், நதிகளில் கொண்டுபோய் போட்டுவிடுவார்கள். 

 பொதுவாக அவர்கள் செய்யும் துர்க்கை சிலைகளின் முகம் ஆக்ரோசமாக, கையில் கத்தி, கம்பு, கடப்பாரை, வெட்டருவா, கோடாரி, வில், கதா உள்ளிட்ட பல ஆயுதங்களோடு இருக்கும்.  மேலும் கட்டாயம் மகிசாசுரன் தலையை கையில் பிடித்தவாறு இருக்கும், 

 ஆனால் இம்முறை பெரும்பாலான பொது இடங்களில் வைக்கப்பட்ட துர்க்கை சிலைகள் கருணை வடிவமாக, அனைத்து கைகளிலும் அபய முத்திரையோடு பழைய பவுத்த பெண் கடவுள்  ரிஷ்ணீஸீ சீவீஸீ - தமிழில் மணிமேகலை உருவங்களின் மாதிரியாக வைத்து செய்யப் பட்டுள்ளது

 இதற்குக் காரணம் மேற்குவங்க ஹிந்துத்துவ அமைப்பினரின் அராஜகம் தான்! கடந்த 6 ஆண்டுகளாக ஒவ்வொரு ராமநவமி, அனுமன் ஜெயந்தி போன்ற நாள்களில் நீதிமன்ற உத்தர வையும் மீறி தெருக்களில் கத்தி, ஈட்டி, திரிசூலம், வாள், கதா உள்ளிட்ட ஆயுதங்களோடு வலம் வந்து சாலையில் வேற்று மத்ததினரின் வாகனங்கள் இருந்தால் அதை சேதப்படுத்துவது. இஸ்லாமியர்களில் வாழிடங்கள் வழியாகச் சென்று ஆயுதங்களைக் காட்டி மிரட்டுவது உள்ளிட்ட மோசமான நடத்தைகளைச் செய்து வருகின்றனர்.   நீதிமன்றங்கள் தொடர்ந்து கண்டனம் செய்துவருகின்றன, காவல்துறையும் தடுத்துப் பார்க்கிறது, 

ஆனால், அவர்கள் சட்டத்தையும் மதிக் காமல், காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி கலவரத்தில் இறங்கிவிடுகின்றனர். இதனால் பல அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளை அப்படியே அரசுக்கு எதிராக திருப்பி அரசியல் செய்துவருகின்றனர். 

இந்த நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் தனது வீட்டில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கும் துர்கை சிலையை எப்போதும் இல்லாமல் இம்முறை பவுத்த பெண் தெய்வ வடிவில் அமைதி தவழும் முகத்தோடு வைத்துள்ளார்.

No comments:

Post a Comment