மோடியின் வெற்று முழக்கமான ‘ஸ்வட்ச் பாரத்’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 6, 2023

மோடியின் வெற்று முழக்கமான ‘ஸ்வட்ச் பாரத்’

சமூக ஊடகமான‘லோக்கல்-சர்க்கிள்ஸ்’ ஆய்வில் அம்பலம்

புதுடில்லி, அக்.6  2014-ஆம் ஆண் டில் நாட்டின் பிரதமராக பொறுப் பேற்ற மோடி காந்தியார் பிறந்த நாளன்று ‘ஸ்வட்ச் பாரத்’  என்கிற பெயரில் ‘தூய்மை இந்தியா’ திட் டத்தை தொடங்குவதாக அறிவிக் கப்பட்டு, அதற்காக விளம்பரங்கள் பலவும் செய்யப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளில் அத்திட்டம் கடும் தோல்வி கண்டுள்ளது என்பது ஆய்வுத்தகவல்மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் 50  ஆண்டு களுக்கு மேலாகியும் நாட்டில்  கழிப்பறை வசதியைக் கூட பூர்த்தி செய்து தரமுடியவில்லை என்று அப்போது கூறியே பிரதமர் மோடி இந்த திட்டத்தைத் துவக்கி  வைத்தார்.  கழிப்பறைகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்றும் கூறியிருந்தார்.

தற்போது, ‘தூய்மை இந்தியா’ திட்டம் துவங்கி 9 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், நாட்டின் பொதுக் கழிப்பறை வசதிகள் இப்போதும் எந்த முன்னேற்றமும் அடையவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாட்டின் பொதுக் கழிப்பிட வசதி குறித்து சமூக ஊடக தளமான ‘லோக்கல்-சர்க்கிள்ஸ்’ ஆய்வு  மேற் கொண்டது. பல்வேறு மாநிலங் களின் 341 மாவட்டங்களில் நடத் தப்பட்ட இந்த ஆய்வில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் கருத்து களைப் பதிவு செய்துள்ளனர். ஆய்வில் பங்கேற்று கருத்து தெரிவித்தவர்களில் ஆண்கள் 69 சதவிகிதம் பேர் மற்றும் பெண்கள் 31 சத விகிதம் பேர் ஆவர். மேலும், முதல்நிலை மாவட்டங் களில் இருந்து 47 சதவிகிதம் பேரும், இரண்டாம் நிலை மாவட்டங்களில் இருந்து 31 சதவிகிதம் பேரும், மூன்றாம் மற்றும் நான்கு நிலை மாவட்டங்களில் இருந்து 22 சதவி கிதம் பேரும் இந்த ஆய்வில் பங் கேற்றனர்.

இதில், நாட்டின் பொதுக்கழிப் பறை வசதிகள் முன்னேற்றம் அடையவில்லை என 52 சதவிகித மக்களும், முன்னேற்றம் அடைந்தி ருப்பதாக 42 சதவிகித மக்களும் தெரிவித்துள்ளனர். பொதுக் கழிப் பறைகளின் செயல்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, சரா சரியாக செயல்படுகின்றன என்று 37 சதவிகிதம் பேரும்,  சராசரிக்கும் குறைவாக செயல்படுகின்றன என்று 25 சதவிகிதம் பேரும், மோச மாக செயல்படுகின்றன என்று 16 சதவிகிதம் பேரும், மிகவும் மோச மாக செயல்படுவதால் பயன்படுத்தா மலேயே திரும்பி விட்டதாக 12 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

வெளியே செல்லும்போது பொதுக் கழிப்பறை வசதியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வணிக நிறுவனத்துக்கு சென்று அங்குள்ள கழிப்பறையைப் பயன் படுத்துவதாக ஆய்வில் பங்கேற்ற 68 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். 

அதற்கான காரணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, பொதுக் கழிப்பறைகள் மோசமான அல்லது பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக பெரும்பான்மையாக 53 சத விகிதம் பேரும், செயல்படும் நிலை யில் இருந்தாலும் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்று 37சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர். 

நன்கு பராமரிக்கப்பட்டு வருவதாக 10 சதவிகிதம் பேர் மட்டுமே பதில் அளித்துள்ளனர். மும்பை, டில்லி, பெங்களூரு போன்ற நாட்டின் பெருநகரங்களி லும் கட்டணக் கழிப்பறை அல்லாத பொதுக் கழிப்பறையைப் பயன் படுத்துவது இன்றளவும் சவாலான விடயமாகவே இருப்பதாக மக்கள் கூறியுள்ளனர். 

பொதுக் கழிப்பறை வசதியைப் பயன்படுத்தாததற்கு முக்கிய கார ணங்களாக அதன் சுகாதாரமின்மை, தூய்மையின்மை மற்றும் பரா மரிப்பின்மை ஆகியவற்றைக் குறிப் பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment