தாம்பரம் கழகக் குடும்பங்களுடன் கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 22, 2023

தாம்பரம் கழகக் குடும்பங்களுடன் கலந்துரையாடல்

தாம்பரம், அக். 22 கடந்த 15.10.23 ஞாயிற்றுக் கிழமை அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தாம்பரம் மாவட்ட கழக தோழர்களின் இல்லத்தில் உள்ள குடும்பத்தினரை சந்தித்து கலந்துரையாடல் நடத்தும் நிகழ்ச்சியின் தொடக்கமாக துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில்,  தாம்பரம் மாவட்ட மகளிரணி தலைவர் இறைவி, மாவட்ட தலைவர் ப.முத்தை யன், மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், தாம் பரம் மாவட்ட மேனாள் செயலாளர் கு.ஆறு முகம் மற்றும் ஆவடி மாவட்ட துணைச் செய லாளர் க.தமிழ்செல்வன் ஆகியோர் பயணம் மேற்கொண்டனர்.

முதல் நிகழ்வாக பம்மல் நகர தலைவர் ந.கோபியின்  இல்லத்திற்கு காலை 8 மணியள வில் அவர் வாழ் விணையர் கோ.நிர்மலா,கோ.தமிழன்பன், கோ.தமிழ்வாணன் ஆகி யோரு டன் கலந்துரையாடி விட்டு, இரண்டாவதாக அனகாபுத்தூர் நகர தலைவர் சண்.சரவணன் இல்லத்திற்கு 9 மணியளவில் அவர் வாழ் விணையர் ச.திலகவதி, ச.பிரபாகரன், ச.எழிலரசி, சங்கர், யுவராஜ், சுப்பிரமணி ஆகியோருடன் கலந்துரையாடிவிட்டு, மூன்றாவதாக தாம்பரம் மாவட்ட இளைஞரணி மாவட்ட தலைவர் குன்றத்தூர் மற்றும் கரைமா நகர் தே.சுரேஷ் இல்லத்திற்கு 10 மணியளவில் அவர் வாழ் விணையர் சு.கனிமொழி, சு.அமுதன், சு.யாழினி ஆகியோருடன் கலந்துரையாடிவிட்டு,  நான் காவதாக கரைமாநகர் கண்ணதாசன் இல்லத் திற்கு 10.30 மணியளவில் அவர் வாழ்விணையர் க.புனிதா மற் றும் க.கனிமொழி, க.மெய் மொழி ஆகியோருடன் கலந்துரையாடி விட்டு அய்ந் தாவதாக குன்றத்தூர் பேரூர் கழக தலைவர் கெருகம்பாக்கம் மு.திருமலை இல்லத்திற்கு 11 மணியளவில் அவர் வாழ்விணையர் தி.அல மேலு, மற் றும் தி.தீபக் ஆகியோருடன் கலந்து ரையாடிவிட்டு காலை உணவை அவர்கள் இல்லத்தில் உண்டு மகிழ்ந்து ஆறாவதாக தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேசை 12 மணியளவில் சந்தித்து உரையாடி விட்டு, ஏழாவதாக தாம்பரம் மாவட்ட தொழிலாளரணி தலை வர் மா.குணசேகரன் இல்லத்திற்கு பகல் ஒரு மணியளவில் அவர் வாழ்விணையர் கு.செல்வராணி மற்றும் கு.திவ்யா ஆகியோரை சந்தித்து உரையாடி 1.30 மணியளவில் அனைவரும் மகிழ்வுடன் விடை பெற்றோம்.

ஒவ்வொறு கழகத் தோழர்களின் இல்லத் திற்கும் சென்ற போது கழக  பொறுப்பாளர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை சந்தித்து மகிழ்ந்த அனைத்து கொள்கை உறவுகளுக்கும் பொன்னாடை மற்றும் பயனாடை அணிவித்து மகிழ்ந்தார் கழக துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார்.

No comments:

Post a Comment