பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 5, 2023

பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்

 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது குறித்து
மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்திடுக!

சென்னை, அக்.5 புதிய மருத் துவக் கல்லூரிகள் தொடங்க, மாநில மக்கள்தொகை அடிப் படையில் கட்டுப்பாடு விதிப் பதை ஏற்க முடியாது. எனவே, இதுகுறித்து மாநில அரசு களுடன் ஆலோசனை நடத்தும் வரை, தேசிய மருத்துவ ஆணை யத்தின் அறிவிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிர தமர் நரேந்திர மோடிக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இதுகுறித்து பிரதமருக்கு அவர் நேற்று (4.10.2023) எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங் குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் புதிய அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள பின்ன டைவு குறித்து தங்கள் கவனத் துக்கு கொண்டு வருகிறேன். ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிர தேசத்தில், 10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 மருத்துவ இடங்கள் என்ற அடிப்படையிலேயே, 50, 100 அல்லது 150 இடங்கள் கொண்ட ஒரு புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி கடிதம் அளிக்கப்படும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இது, அனைத்து மாநிலங்களின் உரி மைகள் மீதான ஆக்கிரமிப்பு. மேலும், கடந்த பல ஆண்டுகளாக மாநிலத்தின் சுகாதார கட்ட மைப்புக்காக அதிக அளவில் முதலீடு செய்து வரும் மாநிலங் களுக்கு அபராதம் விதிக்கும் செயல்.  தற்போது இந்த அறிவிக் கையில் கூறப்பட்டுள்ள அளவு கோலின்படி, மருத்துவர் - மக்கள் தொகை அளவு என்பது மாநில அளவிலான விதிமுறைகளை ஒப்புநோக்கும்போது பொருந் தாததாக உள்ளது. மாநில அளவில் போதிய மருத்துவர்கள் இருந்தாலும், மாவட்ட அளவில் கிடைப்பது தொடர் பிரச்சி னையாகவே இருக்கும். அந்தந்த பின்தங்கிய பகுதிகளில் மருத்துவ கல்லூரியை திறப்பதன் மூல மாகவே இப்பிரச்சினையை தீர்க்க முடியும். 

மாநில அளவிலான அளவு கோல் அடிப்படையில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு கட் டுப்பாடுகள் விதிப்பது, தகுதி யான மாவட்டங்களில் இது போன்ற சுகாதார நிறுவனங்கள் வருவதை தடுத்துவிடும். 

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் துறையினரின் தொடர் முதலீடுகளாலேயே, மருத் துவர்கள் - மக்கள்தொகை விகி தம் அதிகமாக உள்ளது. ஒன்றிய அரசின் முதலீடு இதில் இல்லை என்ற உண்மையை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நாங்கள் பல்வேறு திட்டங்களை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திய போதும், மதுரை எய்ம்ஸ் திட் டம் இதுவரை தொடங்கப்படா மல் உள்ளது. இந்த சூழலில், புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு விதிக்கப் பட்டுஉள்ள கட்டுப்பாடுகள், எதிர்காலத்தில் மருத்துவ துறை யில் ஒன்றிய அரசின் புதிய முத லீடுகளை முற்றிலும் தடுத்து விடும். மேலும், கல்வி நிறுவனங் கள் தொடங்குவதற்கான அடிப் படை உரிமை மீது எந்த ஒரு நிர்வாக அறிவுறுத்தல் மூலமாக வும் கட்டுப்பாடு விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. 

இதை கருத்தில் கொண்டு, இந்த சிக்கல்களை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தவும், அதுவரை தேசிய மருத்துவ ஆணையத்தின் அறி விக்கையை நிறுத்தி வைக்கவும் ஒன்றிய சுகாதாரத் துறைக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித் துள்ளார்.


No comments:

Post a Comment