எடுப்பு சோறு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 28, 2023

எடுப்பு சோறு

அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் ஒரு பேட்டியில் பெரியார் பற்றி சொன்னதற்கு கொக்கரிக்கும் ஆண்ட பேண்ட பரம்பரைகளே ஆரியத்தின் அடியாட்களே அறிந்து கொள்ளுங்கள்..

“எடுப்பு சோறு” என்று ஒரு வழக்கம் தமிழ்நாட்டில் இருந்தது. எடுப்பு சோறு என்றால் பார்ப்பனர் நடத்தும் உணவகங்களில் சூத்திரர்கள் அமர்ந்து சாப்பிட முடியாது. அவர் சற்சூத்திர வகை “சைவ பிள்ளை - முதலியார்” எவராக இருந்தாலும் பார்ப்பனர்கள் நடத்திய உணவகங்களில் நமக்கு அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. இது தான் 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை.

உணவகத்தில் உணவை வாங்கி கையில் எடுத்து கொண்டு போய் தூரமாக நின்றோ அல்லது அமர்ந்து தான் சாப்பிட முடியும், அதுக்கு பெயர் தான் எடுப்பு சோறு.

அன்று சென்னை ராஜதானியில் ரயில் நிலையம், பொது இடங்கள் என்று பல இடங்களிலும் உணவகத்தை நடத்தியது பார்ப்பனர்களே.

பல உணவகங்களில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்று போர்டு வைக்கப்பட்டிருந்தது.

இன்று அதெல்லாம் மாறி இருக்கிறது என்றால் அதற்கு பெரியார் என்ற ஒற்றை மனிதரும், தன்னலமற்ற  அவர் தொண்டர்களின் உழைப்பும் தான் காரணம்.

No comments:

Post a Comment