காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும் புதுவை மேனாள் அமைச்சர் நாராயணசாமி உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 26, 2023

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும் புதுவை மேனாள் அமைச்சர் நாராயணசாமி உறுதி

சென்னை, அக். 26 -  வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படும் என புதுச் சேரி மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். 

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை மீட்கக்கோரியும், பறிமு தல் செய்யப்பட்ட படகுகளை விடு விக்கக்கோரியும், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம் சென்னையில் நேற்று (25.10.2023) நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நாராயணசாமி பேசிய தாவது:

காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும், படகுகளை பறிமுதல் செய்தாலும் அப்போது ஒன்றிய இணையமைச்ச ராக பதவி வகித்த நான் உடன டியாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்டு பிடிபட்ட மீனவர்களை 24 மணி நேரத்துக்குள்ளும், படகு களை 48 மணி நேரத்துக்குள்ளும் விடுவிக்க நடவடிக்கை எடுத்தேன். ஆனால், தற்போதைய பாஜக ஆட்சியில் மீனவர்களை பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படுவது இல்லை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன் றிய அமைச்சர் எல்.முருகன் மீன வர்களின் பிரச்சினைகளை தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. வரும் 2024ஆ-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படும். இவ்வாறு பேசினார்.

இதேபோல் புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் வைத்தியலிங்கம், மீன வர் காங்கிரஸின் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர்.

விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், செல்வப் பெருந்தகை, புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், இலங்கை தூதரகத்தை முற்றுகையிட புறப்பட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவலர்கள்கள் கைது செய்தனர்.

No comments:

Post a Comment