ஒடிசா முதலமைச்சரின் தனிச் செயலாளராக இருந்த தமிழர் கார்த்திகேய பாண்டியன் : பிஜு ஜனதா தளத்தில் முக்கிய பதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 25, 2023

ஒடிசா முதலமைச்சரின் தனிச் செயலாளராக இருந்த தமிழர் கார்த்திகேய பாண்டியன் : பிஜு ஜனதா தளத்தில் முக்கிய பதவி

புவனேஷ்வர், அக். 25- தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.கார்த்திகேய பாண்டியன் என்ற வி.கே.பாண்டியன். இவர், 2000ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரி ஆவார். ஒடிசா மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். கடந்த 2011ஆ-ம் ஆண்டு, ஒடிசா முதலமைச்சர் அலுவலக பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அப்போதிருந்து முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலா ளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2019ஆ-ம் ஆண்டு, நவீன் பட்நாயக் 5ஆ-வது தடவையாக ஆட்சிக்கு வந்த பிறகு, வி.கே.பாண் டியனுக்கு '5டி செயலாளர்' என்ற கூடுதல் பொறுப்பும் அளிக்கப்பட் டது. அரசுத்துறைகளில் மாற்றத் துக்கான முயற்சிகளை அமல் படுத்த இப்பதவி உருவாக்கப் பட்டது.

இதன்மூலம், வி.கே.பாண்டிய னுக்கு முதலமைச்சர் நவீன் பட் நாயக்குடன் நெருக்கம் இன்னும் அதிகரித்தது. அரசுத் திட்டங்களை ஆய்வு செய்ய வி.கே.பாண்டியன் அரசு ஹெலிகாப்டர்களில் பயணம் செய்ய ஆரம்பித்தார்.

மாநில அரசை நவீன் பட்நாயக் குக்கு பதிலாக, வி.கே.பாண்டியன் தான் நிர்வகிப்பதாக எதிர்க்கட் சிகள் குற்றம்சாட்டின. நவீன் பட் நாயக்கின் அரசியல் வாரிசாகவும் வி.கே.பாண்டியன் பேசப்பட்டார். இதற்கிடையே, அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதவாக்கில், நாடாளு மன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அதையொட்டி, வி.கே.பாண்டி யனை அரசுப்பணியில் இருந்து விடுவித்து, அரசியலில் ஈடுபடுத்த முதலமைச்சர் நவீன் பட்நாயக் திட்டமிட்டார்.

அதன்படி, வி.கே.பாண்டியன், அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற விண்ணப்பித்தார். அவரது கோரிக்கையை ஒன்றிய அரசு நேற்று முன்தினம் (23.10.2023) ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில், விருப்ப ஓய்வு பெற்ற 24 மணி நேரம் முடிவதற்குள் வி.கே.பாண்டியனை ஒடிசா மாநில அரசு புதிய பதவியில் நியமித்துள்ளது. இது, கேபினட் அமைச்சர் அந்தஸ்து கொண்ட பதவி என்பது குறிப்பிடத் தக்கது. இதுதொடர்பாக ஒடிசா மாநில பொது நிர்வாகம் மற்றும் மக்கள் குறைதீர்ப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:

மாற்றத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி திட்டம் மற்றும் நவீன ஒடிசா திட்டத் துக்கான தலைவராக கேபினட் அமைச்சர் தகுதியுடைய பதவியில் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட் டுள்ளார். அவர் முதலமைச்சரின் கீழ் நேரடியாக செயல்படுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஒடிசா மாநில அரசின் 'நமது ஒடிசா, புதிய ஒடிசா' என்ற புதிய திட்டத்தின் பொறுப்பாளராகவும் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட உள்ளார்.

இத்திட்டம், பாண்டியனின் சிந்தனையில் உதித்த திட்டம் ஆகும். வி.கே.பாண்டியன், ஆளும் கட்சியான பிஜு ஜனதாதளத்தில் இணைவார் என்று அக்கட்சி வட் டாரங்கள் தெரிவித்தன. அதன் மூலம், அவர் நேரடி அரசியலில் ஈடுபடுத்தப்படுவார் என்று தெரி கிறது. 

No comments:

Post a Comment