உணவு பரிமாறும் ஏஅய் தொழில்நுட்ப ரோபோக்கள்..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 19, 2023

உணவு பரிமாறும் ஏஅய் தொழில்நுட்ப ரோபோக்கள்..!

உ.பி., தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள உணவகத்தில் ரூபி, திவா என்னும் இரு ஏஅய் தொழில்நுட்ப பெண் ரோபோக்கள் பணியில் அமர்த்தப் பட்டு உள்ளன. 'தி ரோபோட் ரெஸ்டாரன்ட், தி எல்லோ ஹவுஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உணவகத்துக்கு சாப்பிட வருவோருக்கு இந்த இரண்டு ஏஅய் ரோபோக்களும் உணவு பரிமாறும், மேஜையை சுத்தம் செய்யும், தண்ணீர் கொண்டுவந்து கொடுக்கும். சாப்பிட்ட பின்னர் பில் கொண்டுவந்து கொடுக்கும். வெறும் மூன்று மணிநேரம் இந்த ரோபோக்களுக்கு சார்ஜ் ஏற்றினால், தொடர்ந்து 12 மணிநேரம் உணவகத்தில் வெயிட்டர் வேலை பார்க்கும்.

கூகுள் நேவிகேஷன் செயலி புகுத்தப் பட்ட இந்த ரோபோக்கள், நடக்கும்போது எதிரே யாராவது குறுக்கே வந்தால் உடனே நின்றுவிடும். 'கொஞ்சம் வழிவிடுங்கள்' எனக் கூறும். தான் செல்லும் வழியில் இடர்பாடுகள் இல்லை என்பதை சென்சார் உதவியுடன் உறுதி செய்துகொள்ளும் இந்த ரோபோக்கள், உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும்.

வாடிக்கையாளருடன் இந்த ரோபோக் களால் கலந்துரையாட முடியும். குறிப்பிட்ட உணவுப் பொருள் இல்லை என்றால் இல்லை என அவரிடம் அறிவித்துவிடும். வாடிக்கை யாளரின் உணவு ஆர்டரை தனது மெமரியில் பதிவு செய்துகொள்ளும் இந்த ரோபோக்கள், உணவு தயாரானதும் வாடிக்கையாளரிடம் அத்தகவலை அறிவிக்கும். உணவை எடுத்து வரும் இவை, மேஜை மீது வைத்துவிட்டு 'நீங்கள் ஆர்டர் செய்த உணவு உங்கள் மேஜைக்கு வந்துவிட்டது..!' எனக் கூறும். தற்போது நொய்டா கிளையிலும் இந்த ரோபோக்கள் பணியாற்றி வருகின்றன.

இதனுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டு கின்றனர். இந்த ரோபோக்களின் படங்கள் இணையத்தில் வைரலாகிவருவது குறிப் பிடத்தக்கது. 

No comments:

Post a Comment