தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்குப் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 13, 2023

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்குப் பாராட்டு

பேச்சுவார்த்தையில் உடன்பாடு :  ஆசிரியர்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றனர்

சென்னை,அக்.13 பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேசுடன்  நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட் டதை அடுத்து சென்னையில் இன்று (அக்.13) நடத்தவிருந்த போராட்டத்தை ரத்து செய்வதாக டிட்டோஜாக் ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடல், எமிஸ் பணிகளில் இருந்து விடுவித்தல் என்பன உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சென்னையில்  இன்று அக்டோபர் 13-ஆம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது. இதை அடுத்து டிட்டோஜாக் அமைப்பின் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் 11.10.2023 அன்று பேச்சுவார்த்தை நடத் தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி போராட்டம் நடை பெறும் என்று ஆசிரியர் சங்கங்கள் அறிவித்தன. 

இதையடுத்து டிட்டோஜாக் நிர்வாகி களை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், நேற்று (12.10.2023) காலையில் ஆசிரியர் சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. ஆசிரியர் சங்கங்களுக்குள் முரண்பாடு இருப்பதாகவும், அதை சரிசெய்து கொண்டு அவர்கள் என்னை சந்தித்து தங்கள் கருத் துகளை தெரிவிக்கலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ்விளக்கம் அளித்தார். அதன்பின் மாலை சென்னையில் உள்ள அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது ஆசிரியர் சங்கங்களின் சில கோரிக்கைகளை ஏற்பதாக அமைச்சர் உறுதி அளித்ததால், போராட்டத்தை கைவிடுவதாக ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் அறிவித்தனர்.

இதுகுறித்து டிட்டோஜாக் நிர்வாகிகள் தாஸ், வின்சென்ட் பால்ராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 

‘‘30 கோரிக்கைகளில் 11-அய் நிறை வேற்றுவதாக அமைச்சர் உறுதி அளித் துள்ளார். முக்கிய கோரிக்கையான எமிஸ் பதிவேற்றங்களை நவம்பர் 1-ஆம் தேதியில் இருந்து ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் இன்று(அக்.13) நடைபெற இருந்த போராட்டம் கைவிடப்படுகிறது. அதற்கு பதிலாக சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகேவிளக்கக் கூட்டம் நடைபெறும்’’ என்றனர்.

No comments:

Post a Comment